ஜனநாயகன்தான் கடைசி படமா தளபதி சார்.. ‘தேர்தல் முடிவுகளை பொறுத்து’ - மமிதாவுக்கு குஷியான பதில் கொடுத்த விஜய்!
ஜனநாயகன் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் படங்களில் நடிப்பாரா என்பது குறித்து மமிதா பைஜு பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி 2024 அன்று தன்னுடைய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கினா ர். கூடவே சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும், தற்போது அவர் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படமே தனது கடைசி படம் என்றும் கூறியிருந்தார்.
அவரது இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த மமிதா பைஜு ஒரு நிகழ்ச்சியில் விஜய் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து படங்களில் நடிப்பார் என்று பேசி இருக்கிறார்.
தேர்தல் முடிவுகளை பொறுத்தே
சமீபத்தில் அயர்லாந்தில் நடந்த கேரளா கார்னிவலில் மமிதா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘ஒரு நாள் நாங்கள் ஒன்றாக படப்பிடிப்பில் இருந்தபோது, நான் அவரிடம் சாதாரணமாக ஜன நாயகன் உண்மையிலேயே உங்களது கடைசி படமா? என்று கேட்டேன்.