லேட்டானாலும் சம்பவம் பண்ண காத்திருக்கும் அஜித்! அடுத்த இயக்குனர் இவர் தான்! வெளியான தகவல்!
2025 ஆம் ஆண்டில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் என இரண்டு படங்கள் இருப்பதை தொடர்ந்து அஜித் மற்றொரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது குறித்தான தகவல் தற்போது வைரல் ஆகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு சில தமிழ் நடிகர்களுக்கு சிறந்த கம் பேக் ஆண்டாக இருக்கப் போகிறது என்பது உறுதி. அதில் முன்னிலையில் இருப்பவர் நடிகர் அஜித். கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாமல் ரசிகர்களை ஏமாற்றி வந்த அஜித், கடந்த ஆண்டு தொடர்ந்து இரண்டு படங்களை நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வரும் பொங்கல் நாளன்று வெளியாக இருந்த விடாமுயற்சி தள்ளிப்போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது உறுதி.
நடிகர் அஜித் படம் நடிக்காவிட்டாலும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை என்றும் குறைந்த பாடு இல்லை. அவரது ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் அஜித்தின் பட அப்டேட் கேட்பது, “கடவுளே அஜீத்தே” என கத்துவது என பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நடிகர் அஜித் இதில் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இவை அனைத்தையும் நிறுத்த வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டு வருவார்.
ரசிகர்களுக்கு விடுத்த வேண்டுகோள்
இந்த நிலையில் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று அறிக்கை விட்டது. அப்டேட் கேட்கக் கூடாது என்று குறிப்பிட்டது. மேலும் சமீபத்தில் வெளியான கடவுளே அஜித்தே என்ற கூச்சலை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை மட்டுமே அளித்து வருகிறார். இந்த நிலையில் இறுதியாக நடிகர் அஜித்திற்கு துணிவு படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை இயக்குனர் அ.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்த நிலையில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வந்தார். இந்த இரண்டு படங்களின் இறுதி கட்டப்பட படிப்பும் கடந்த 2024 ஆம் ஆண்டின் இறுதியில் முடிந்து தற்போது வெளியாகும் தருவாயில் இருந்து வருகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு முழுவதும் நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆண்டின் முதல் நாளிலேயே விடாமுயற்சி படம் தள்ளிப்போனது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருப்பதாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
புதிய படம்
தற்போது நடிகர் அஜித்தின் மற்றொரு படம் குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் அடுத்து நடிகர் அஜித் நடிக்க இருப்பதாகவும் அந்த கதையின் ஒன்லைனை அஜித்திடம் தெரிவித்த போது உடனே பணிகளை ஆரம்பிக்குமாறு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர் தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டிற்குள் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தேசிங்கு பெரியசாமி தற்போது நடிகர் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க இருந்ததாக கூறப்பட்டு வந்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்