Vijay Wearing a Wig: நடிகர் விஜய் விக் வைத்து நடிக்கிறாரா? - சர்ச்சையும் பதிலும்
நடிகர் விஜய் தனது விக் வைத்து நடிக்கிறார் எனப் பலரும் சமூகவலைதளங்களில் பேசி வரும் நிலையில், அதற்கு உரிய விடை கிடைத்துள்ளது.
விஜய்க்கு சமீபகாலமாக, அவரைப் பிடிக்காதவர்கள் விஜய் விக் வைத்து நடிக்கிறார் என எப்போது பார்த்தாலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
குறிப்பாகப் பார்த்தால் பைரவா, லியோ ஆகியப் படங்களில் விஜயின் ஹேர்ஸ்டைல் பலரால் கடும்விமர்சனத்திற்குள்ளானது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூட நடிகர் விஜய், சிகை அலங்காரத்தைச் சரிசெய்யவேண்டும் என கருத்துப் பதிவிட்டிருந்தார். மேலும், அவரது கருத்துக்கு விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனிடயே விஜய்யின் சிகை அலங்கார நிபுணர், தேவ் சக்திவேல் சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்தபேட்டியில், 'விஜய்க்கு 50 வயதினை நெருங்கியுள்ளது. இருந்தாலும் அவர் சொந்த முடியை அற்புதமாகப் பராமரித்து வருகிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.
இது அவரது எதிர்ப்பாளர்களுக்கு ஒரு தக்க பதிலடியாக அமைந்துள்ளது. இந்நிலையில் மற்றவர்கள், சிலர் அதை திட்டவட்டமாக மறுத்து, நடிகர் விஜய் ஹேர் டிரான்ஸ்பர்மேஷனாவது செய்து இருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்திய தளபதி 68 படப்பிடிப்பு விழாவில், விஜய் தனது வழக்கமான பாணி ஹேர்ஸ்டைலையே மெயின்டெயின் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்