'கொரோனா டைமில் நடந்த வேலை இழப்பு.. வாடகை வீட்டில் தான் இருக்கோம்.. சம்பாதிக்கிறது பத்தல': யூடியூபர் சாரா நரேன் பேட்டி
யூடியூபர் சாரா நரேன் பேட்டி: தாங்கள் எதிர் கொண்டு வரும் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து பிரபல யூடியூபர் தம்பதியரான சாரா மற்றும் நரேன் பேட்டியளித்திருக்கின்றனர்.

யூடியூபர் சாரா நரேன் பேட்டி: சோசியல் மீடியாவில் அண்மைக்காலமாக கலக்கி வரும் தம்பதி யூடியூபர்கள் தான், சாரா மற்றும் நவீன். இவர்கள் தாங்கள் கொரோனா காலத்தில் சந்தித்த பிரச்னைகள், வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு வாங்கும் கனவு, குழந்தை பிறப்பு எனப் பல்வேறு விஷயங்களை கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்குப் பகிர்ந்துள்ளனர்.
இதுபற்றி சாரா மற்றும் நரேன் அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம். அதில்,
'முதல் சந்திப்பு மற்றும் லவ் பண்ணும்போது நீ இந்த சத்தியம் எல்லாம் செய்தயே என்று பேசிக்கொண்டது உண்டா?
நரேன்: லவ் பண்ணும்போது பொய் பிராமிஸ் தானே பண்ணியிருக்கோம்.
சாரா: பேசுறது எல்லாம் பொய்யாக பேசிவாருங்க.
நரேன்: பிராமிஸ்னு எதுவும் பண்ணல. நான் வேணும்னு எதுவும் பேசலைங்க.
ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டீங்க?
நரேன்: அவங்களுக்கு இன்றைக்கு வரைக்கும் தெரியாது நான் ஏமாத்தி தான் கல்யாணம் பண்ணுனேன் என்று.
எனக்கே தெரிஞ்சிருச்சே?
நரேன்: அவங்க இன்னும் கண்டுபிடிக்க முடியலை இல்லையா.
சாரா: நான் ரியலைஸ் பண்றதுக்குள்ள, இன்னொரு தடவை ஏமாந்திடுவேன்.
கல்யாணம் பண்றதுக்கு மனதளவில் தயாராக இருந்தீங்களா? வீட்டில் எப்படி நம்பவைச்சீங்க?
சாரா: இந்த கேள்விக்கு இவர் நல்லா பதில் சொல்வார். நீ சொல்லு.
நரேன்: எங்க இரண்டுபேர் வீட்டிலேயும் அம்மா ஒத்துக்கிட்டாங்க. அம்மாவும் மாமியாரும் எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. அம்மாக்களை வைச்சு அப்பாக்களை ஒத்துக்க வைச்சாச்சு. எப்பயும் அப்பா அப்படிதானே.
படத்தில் காட்டுறமாதிரி எல்லாம் இல்லை. என்ன அவங்கள நம்ப வைக்க 1 மாதம் ஆச்சுங்க. அதுகூட அவங்க வீட்டில் தாங்க கன்வின்ஸ் பண்ண ஒரு மாதம் ஆனது.
கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறம் எப்படி இருந்துச்சு? புதுசாக இதெல்லாம் பண்ணனுமா அப்படின்னு கண்டுபிடிச்சிருப்பீங்க இல்லையா? அது என்ன?
சாரா: புதுசாக என்ன சாப்பாடு செய்றது. என்ன குழம்பு கட்டிட்டுபோறது ஆபிஸுக்கு. இதெல்லாம் தான் புதுசாக இருந்தது. மத்தபடி எங்க இரண்டு பேருக்கும் இடையில் புது ஃபீல் இல்லை.
கல்யாணம் முடிஞ்சதும் நீங்க தனியாக வந்திட்டீங்க?
நரேன்: கல்யாணம் ஆன அன்னைக்கு தனியாக வந்திட்டோம்.
சாரா: இரண்டு பேரும் வேலை பார்க்கிறதால், இவங்க வீட்டிலேயே அதை பிளான் பண்ணிட்டாங்க. ஒரு கூட்டுக்குடுத்தனத்தில் எந்த அளவுக்கு இருக்கும்ன்னு தெரியலன்னு சொல்லிட்டாங்க. இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஆபிஸுக்கு போயிட்டு, ஒரே நேரத்தில் வந்திடுவாங்கன்னு யோசிச்சு அப்படி தனியாக வைச்சிட்டாங்க.
நரேன்: நீங்க கேட்கிற பொறுப்புகள், பட்ஜெட், காசு இதெல்லாம் பசங்க பிறந்ததுக்குப் பின் தான் தொடங்குச்சு. ஓ அதிகமாக சம்பாதிக்கணும்போல. நமக்கு இது பத்தல. நாம் சம்பாதிக்கணும் முடிவு எடுத்தது எல்லாம் பசங்க வந்ததுக்குப் பின் தான்.
நீங்க சம்பாதிக்கிறது பத்தமாட்டியுதுன்னு உணர்ந்த தருணம் எப்போது?
நரேன்: கொரோனா டைமில் சாராவுக்கு வேலை இருந்துச்சு. எனக்கு வேலை போயிடுச்சு.
சாரா: அதிலும் வொர்க் ஃபிரம் ஹோம் என்பதால், பாதி சம்பளம் அப்படின்னு தான் இருந்தது. இவர் கொஞ்சம் சப்போர்ட் பண்ணுனார்.
நரேன்: அப்போ உயிர் பிழைச்சால் போதும்ன்னு தான் இருந்தது. சம்பளத்தை விட கோவிட் பெரிசு இல்லையா.
சொந்த வீடு வாங்க என்ன பிளான் பண்ணிட்டு இருக்கீங்க?
சாரா: வாடகை வீட்டில் தான் இருக்கோம். அதை வருத்தமாக யோசிக்க மாட்டோம். ஆனால், எங்களுக்கு அந்த வீடு வாங்கும் கனவு அப்படியே தான் இருக்குது. இவங்க வீட்டு பக்கம் ஓரளவுக்கு செட்டில்டு ஃபேமிலி தான். இருக்கு, ஆனால், நாங்க தனியாக இருக்கிற அளவுக்கு இல்லை. அதனால் நாங்க எங்களோட சேமிப்பில் கொஞ்சம் பிளான் பண்ணிட்டு இருக்கோம். ஆனால், அது இன்னும் டிரீமாக தான் இருக்கு’’ என்றார், சாரா
நன்றி: கலாட்டா தமிழ் யூடியூப்!

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்