KottuKKaali: ‘என்னது கொட்டுக்காளி ஸ்லோவாக இருக்கா?’ - பதறிய இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ்
KottuKKaali:என்னது கொட்டுக்காளி ஸ்லோவாக இருக்கா? - பதறிய இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் உடையே பேட்டி வெளியாகியுள்ளது. கொட்டுக்காளி படம் தொடர்பாக சூரியும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
KottuKKaali: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னாபென் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த படம், கொட்டுக்காளி. இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருந்தார். கொட்டுக்காளி திரைப்படமானது வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து கொட்டுக்காளி படத்தில் நடித்த நடிகர் சூரியும் இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜூம், சினி உலகம் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்தனர். அதில் கேட்கப்பட்ட கேள்விகளு நடிகர் சூரியும், இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜூம் கூட்டாக பதிலளித்துள்ளனர். அவையாவன:
பி.எஸ். வினோத் ராஜ் எத்தகைய இயக்குநர்?(சூரியிடம் கேட்கப்பட்ட கேள்வி)
தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ். உலக சினிமாவில், தமிழ் சினிமாவில் இருந்து வளர்ந்து வரும் நபராக பி.எஸ். வினோத் ராஜ் இருப்பார்னு நினைக்கிறேன்
சுயாதீனப்படங்களில் இருந்து பெரிய படம். கூழாங்கல் என்னும் படத்தின் வெற்றி தந்த அழுத்தம், கொட்டுக்காளிக்கு எப்படி இருந்தது?(இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜிடம் கேட்கப்பட்ட கேள்வி)
எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. சூரி அண்ணா, சிவகார்த்திகேயன் அண்ணா எல்லோரும் வந்ததற்குப் பின், எனக்கு அது பொறுப்புணர்வாகத்தான் இருக்கு.
கலைப்படங்கள், வணிகரீதியிலான படங்கள் இருக்கும்போது சிவகார்த்திகேயன் ‘கொட்டுக்காளி’மாதிரியான கலைப்படங்களைத் தயாரிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்( சூரி பதில் கூறுகிறார்)
- அதை நான் வரவேற்கிறேன். ஜனரஞ்சகமான படம், கற்பனையான படம் என எவ்வளவோ படங்கள் தமிழ் சினிமாவில் வருகிறது. இங்கு பொழுதுபொக்கான படங்கள் செய்யும் இயக்குநர்கள் நிறைய இருக்கிறார்கள். வினோத் ராஜ் மாதிரியான இயக்குநர்கள் உண்மைக்கு மிக நெருக்கமான படங்களைத் தருகின்றனர். படம் பார்க்கும்போது மிக யதார்த்தமான, உண்மைக்கு நெருக்கமான கதையைச்சொல்வது சிறப்பு. அப்படி ஒரு படத்தைத் தான் இயக்கவேண்டும் என்று இயக்குநர் வினோத் நினைப்பதும், அதை தயாரிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். ஒரு நடிகனாக தம்பி சிவா, சம்பாதிப்பது எல்லாம் இரண்டாம் விஷயம். ஆனால், அவரது தயாரிப்பிலும் இப்படி ஒரு படம் எடுக்கிறது என்பதும் பெருமைப்படவேண்டிய விஷயம். அது காலத்துக்கும் ஒரு நினைவாக இருக்கும்.
கொட்டுக்காளி படத்தில் தொழில்முறை நடிகர்களை அதிகமாக நடிக்க வைப்பதற்குப் பதிலாக, அவ்வூர் மக்களை அதிகமாக நடிக்க வைக்கக் காரணம் என்ன?(இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜிடம் கேட்கப்பட்ட கேள்வி)
கிராம மக்களை நடிக்க வைப்பதற்குக் காரணம், உண்மைக்கு நெருக்கமாக இருக்கணுனுங்கிற காரணத்துக்காகத்தான். கேமரா இருக்கு அப்படிங்கிற உணர்வை, அவர்களை மறக்கடிச்சுட்டோம் என்றால் போதும், கிராம மக்கள் சூப்பராக நடிச்சிருவாங்க. எனக்கு அது ஒன்னும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை. எனக்கு ஒரு சில காட்சிகள் எல்லாம் இவர்கள் இருந்தால் தான், முழு சப்போர்ட் பண்ணுவாங்கன்னு எல்லாம் இருக்கு. அப்புறம் இந்தக் கதையையும் பயணங்களையும் ஏதோ ஒரு வகையில், கிராமங்களில் இருந்து நடிக்கும் மக்கள் பார்த்திருப்பாங்க. கேட்டிருப்பாங்க. அவங்களுக்கு எமோஷனல் எல்லாமே ஏதோ வகையில் தெரிஞ்சிருக்கும். அப்படி இருக்கும்போது கிராமத்து நடிகர்களிடம் சென்று சின்னதாக, ஒரு இன்புட் கொடுக்கும்போது நிறைய கொடுத்துவிடுவார்கள். அந்தக் கதைக்களத்துக்கு சென்னையில் இருந்து ஒரு துணை நடிகரை கூட்டிக்கொண்டுபோய் நடிக்கவைப்பதற்கும், அங்கு இருக்கும் நபர்களை நடிக்க வைப்பதற்கும் ஒரு நெருக்கம் இருக்கும்ணு நினைக்கிறேன்.
படத்தில் சேவல் நடிச்சது மாதிரி இருக்கு? அது எப்படி எடுத்தீங்க? (இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜிடம் கேட்கப்பட்ட கேள்வி)
சேவல் காட்சிகளை எடுப்பது என்பது காத்திருத்தல் தான். அதுபோக்கில், அதனைவிட்டுவிட்டால்போதும். அதனுடைய ரியாக்ஷன்களை காத்திருந்து, அதன்போக்கில்போய் படமாக்கிவிடலாம்.
கொட்டுக்காளி படத்தில் நிறைய கட்ஸ் இல்லை. அது பார்ப்பதற்கு ஸ்லோவாக இருப்பதுபோல் தோன்றுகிறது? அதனை எப்படி பார்க்கிறீங்க? (இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜிடம் கேட்கப்பட்ட கேள்வி)
அது ஸ்லோ கிடையாது. கொட்டுக்காளி கதையை நிதானமாக சொல்லணும் நினைக்கிறேன். ஒரு எமோஷனலான காட்சி போயிட்டிருக்கும்போது,கட் பண்ணி, கிளோஸ் வைக்கிறதுங்கிறது சூப்பராக இருக்கும். ஆனால், யதார்த்தம் மிஸ் ஆவதுபோல் தோன்றும். அதனால் தான், நீளமான ஷாட் வைக்கிறேன்.
கொட்டுக்காளி படக்குழுவினருடன் எப்படி ஒன்றி நடிக்க முடிந்தது?(சூரியிடம் கேட்கப்பட்ட கேள்வி)
கூழாங்கல் படம் பார்த்தபின்பு, வினோத்ராஜ் மாதிரி இயக்குநர்கிட்ட வேலைசெய்யணும்னு நினைச்சேன். ஆனால், அவர் என்னை வைச்சு படம் எடுக்கணும்னு சொல்லும்போது, அந்த பாண்டி கேரக்டர் எங்க கிராமப்பகுதிகளில் இருப்பதைப் பார்த்திருக்கேன். நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மைக்கு நெருக்கமான கதைகளிலும் நான் இருக்க ஆசைப்பட்டேன். கருடன் படத்திலும் நான் இருக்கணும். கொட்டுக்காளி படத்திலும் நான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். இயக்குநர் நடிக்க கேட்டவுடன் ஓகேன்னு சொல்லிட்டேன்.
நன்றி: சினி உலகம்
தொடர்புடையை செய்திகள்