Vetrimaaran Viduthalai: விடுதலை படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.. - விடுதலை பாகம் 2 எப்போது ரிலீஸ்? -தயாரிப்பாளர் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vetrimaaran Viduthalai: விடுதலை படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.. - விடுதலை பாகம் 2 எப்போது ரிலீஸ்? -தயாரிப்பாளர் பேட்டி!

Vetrimaaran Viduthalai: விடுதலை படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.. - விடுதலை பாகம் 2 எப்போது ரிலீஸ்? -தயாரிப்பாளர் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 23, 2024 06:51 PM IST

விடுதலை1 படத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்!

விடுதலை பாகம் 1 ற்கு அங்கீகாரம்!
விடுதலை பாகம் 1 ற்கு அங்கீகாரம்!

‘விடுதலை 1’ வெளியானதில் இருந்து உலகளவில் பார்வையாளர்களின் கவனத்தைப் இந்தப்படம் பெற்றது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்த படம் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.  

ஜனவரி 31 அன்று நடைபெற இருக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை I & II’ திரையிடப்படத் தேர்வாகி இருக்கிறது.  இப்போது இந்தப்படம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. 

ஆம், புனேவில் நடைபெற்ற, புனே சர்வதேச திரைப்பட விழா (PIFF) 2024-ல் சிறப்புத் திரையிடலின் போது ’விடுதலை1’  சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த வருடம் கோடை விடுமுறையில் ’விடுதலை படத்தின் 2ம் பாகத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதனை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை தென்றல் ரகுநாதன் ஆடைகள் இன்றி நிர்வாணமாக நடிக்கும் காட்சி ஒன்று அமைந்துள்ளது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தப்படத்தில் பெண்கள், ஆண்கள் என பலரையும் போலீசார் நிர்வாணமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்வது தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அந்த வகையில்  நடிகையுமான தென்றல் ரகுநாதன் இந்தப்படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார். அது குறித்து அவர் அளித்த பேட்டி இங்கே!

இது குறித்துப் பேசிய அவர், செங்கல்பட்டு பகுதியில் இயக்குநர் வெற்றிமாறன் படப்பிடிப்பில் இருந்தார். ஒரு நாள் இரவு ஏழு மணி அளவில் அவரை சந்தித்துப் பேசினேன். சரி வந்து விடுங்கள் என்று சொன்னார். வசனம் பேசுங்கள் என்று என்னை அவர் சோதனை செய்யவில்லை. மறுநாள் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.

இந்த படத்தில் முதலில் நடிக்கும் பொழுது எனக்கு என்ன கதாபாத்திரம் என்று தெரியவில்லை. இயக்குநர் வெற்றிமாறன் படம் என்பதால் இதுகுறித்து கேட்க எனக்குத் தோன்றவில்லை. படப்பிடிப்பு தளத்தில் தான் நான் காவல் நிலைய காட்சியில் ஆடைகள் இன்றி நடிக்க வேண்டும் எனக் கூறினார்கள்.

அப்படி நடிக்கும்போது எனக்குப் பயமோ, தயக்கமோ ஏற்படவில்லை. நான் அங்குப் பாதுகாப்புடன் இருப்பதாகவே உணர்ந்தேன். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் படப்பிடிப்பில் நான் ஆடைகள் என்று நிர்வாணமாக நடிக்கவில்லை. சிஜியில் எடிட் செய்து தான் அது போல் திரையில் காட்டப்பட்டது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் என்ன கதாபாத்திரம் என்பது கூட தெரியாது. இந்த படத்தில் டப்பிங் பேசும்போது தான் நான் கதாநாயகியின் அம்மாவாக நடித்துள்ளேன் என்பது எனக்குத் தெரிய வந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.