‘உச்சி வெயிலில் மலை உச்சியில் சீமான்.. டயலாக் தராமல் கூலாக தம் அடித்த மணிவண்ணன்..’
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘உச்சி வெயிலில் மலை உச்சியில் சீமான்.. டயலாக் தராமல் கூலாக தம் அடித்த மணிவண்ணன்..’

‘உச்சி வெயிலில் மலை உச்சியில் சீமான்.. டயலாக் தராமல் கூலாக தம் அடித்த மணிவண்ணன்..’

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 05, 2025 11:48 AM IST

‘டயலாக் எல்லாம் எழுத மாட்டார். ஸ்பாட்ல வர்றது தான் டயலாக். அவரே சொல்லுவார், அவரே எடுப்பார். சீன்ஸ் அவரிடம் இல்லாததால், ஸ்பாட்டில் 300 பேர் வரை இருப்பாங்க. அதுக்கு தான் செலவாகும். மற்றபடி, தயாரிப்பாளருக்கு செலவு இழுத்துவிடுவோம் என்கிற எண்ணம் எல்லாம், அவருக்கு இல்லை’

‘உச்சி வெயிலில் மலை உச்சியில் சீமான்.. டயலாக் தராமல் கூலாக தம் அடித்த மணிவண்ணன்..’
‘உச்சி வெயிலில் மலை உச்சியில் சீமான்.. டயலாக் தராமல் கூலாக தம் அடித்த மணிவண்ணன்..’

‘‘நாகராஜன் சோழன் MA MLA படம் தான், என்னுடைய முதல் தயாரிப்பு திரைப்படம். மணிவண்ணன் சார் தான் டைரக்டர். மணிவண்ணன் சார் குழந்தை மாதிரி. என்னிடம் பணியாற்றி இயக்குனர் எல்லாமே, கிட்டத்தட்ட அப்படிப்பட்டவர்கள் தான். மணிவண்ணன் சாருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியாது. ஏனென்றால் அவரிடம் கதைக்கான ஸ்கிரிப்ட் இருக்காது. ஒரு துண்டு பேப்பரில் எழுதி வைத்திருப்பார் அவ்வளவு தான். ‘இன்னைக்கு யார் யார் இருக்காங்க..’ அவங்கள வெச்சு எடுப்போம்னு சொல்லுவார். 

டயலாக் எல்லாம் எழுத மாட்டார். ஸ்பாட்ல வர்றது தான் டயலாக். அவரே சொல்லுவார், அவரே எடுப்பார். சீன்ஸ் அவரிடம் இல்லாததால், ஸ்பாட்டில் 300 பேர் வரை இருப்பாங்க. அதுக்கு தான் செலவாகும். மற்றபடி, தயாரிப்பாளருக்கு செலவு இழுத்துவிடுவோம் என்கிற எண்ணம் எல்லாம், அவருக்கு இல்லை. 10 காசுக்கு ஆசைப்பட மாட்டார். அவர் ஒரு கம்யூனிசவாதி. எந்த டாபிக் எடுத்தாலும் பேசுவார். பயங்கர அப்டேட்டா இருப்பார்.

பயங்கர அப்டேட் ஆன மனிதர்

நான் மணிவண்ணன் சாருடன் பயணிக்கும் காலத்தில் தான், வாட்ஸ்ஆப் வந்தது. நானே அப்போ அதை பயன்படுத்தவில்லை. ஆனால், மணிவண்ணன் சார் உபயோகித்தார். தன்னை இளமையாக்கிக் கொள்ள மெனக்கெடுவார். நிறைய புக் படிப்பார். அவரிடம் உட்கார்ந்தால் எந்த விசயமும் பேசலாம். அவரிடம் இருக்கும் சிக்கல், தயாரிப்பு கட்டுப்பாடு இருக்காது. அவர் ஒரு கிரியேட்டர் அவ்வளவு தான். 

ஒருமுறை சீமானை ஒக்கேனக்கல் மலை உச்சில் நிற்க வைத்துவிட்டார். பயங்கரமான வெயில். டயலாக்கே கொடுக்காமல் மேலே ஏத்திவிட்டார் என்று சீமான் மேலே நிற்கிறார். மணிவண்ணன் கீழே நின்று தம் அடித்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் சென்று, ‘சீமான் டயலாக் கேட்கிறார்’ என்று சொல்கிறார்கள். ‘வந்தா தரமாட்டோமா..’ என்று கூலாக சொன்னார் மணிவண்ணன். அதுக்கு அப்புறும் தம் அடித்துக்கொண்டே, டயலாக் சொல்லி அனுப்பினார். 

காட்சிகளில் சீட்டிங் செய்வார்

அவரிடம் ஒரு அறை கொடுத்தால், அதை 10 சீனுக்கு பயன்படுத்துவார். ஒரே அறையை எல்லா காட்சிக்கும், எல்லா விதமான சூழலுக்கும் பயன்படுத்தி விடுவார். அது பாரதிராஜா சார் பட்டறையில் இருந்து வந்தவர்களுக்கு கை வந்த கலை. பாலக்காடில் எடுத்த சீசனை, பல்லாவரத்தில் மேட்ச் செய்வார். லொக்கேஷனுக்கு மெனக்கெட மாட்டார். காட்சிகளில் சீட்டிங் செய்துவிடுவார். 

ஒரு ரெசார்ட் கொடுத்தால், மொத்த படத்தை அங்கேயே முடித்துவிடுவார். அவருக்கு தெரியாமலேயே அவருடைய படத்தில் செலவு வரும். 1.75 கோடிக்கு ஆரம்பிச்ச படம், 4:75 கோடிக்கு தான் முடிந்தது. எனக்கு முதல் படம் என்பதால், எனக்கும் ஒன்னும் புரியவில்லை. எங்கு செலவானது என்று பார்த்தால், ஸ்பாட்டில் நிற்கும் அந்த 200, 300 பேரால் தான். அந்த செலவை, அவர் திட்டமிட்டு செய்வதில்லை,’’
என்று அந்த பேட்டியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.