Rahul Tiky: ‘எல்லாத்தையும் சிரிக்க வச்சான்.. இப்ப ஒரேடியா போயிட்டான்; தயவு செஞ்சு பைக்ல வேகமா’ -ராகுல் டிக்கி தம்பி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rahul Tiky: ‘எல்லாத்தையும் சிரிக்க வச்சான்.. இப்ப ஒரேடியா போயிட்டான்; தயவு செஞ்சு பைக்ல வேகமா’ -ராகுல் டிக்கி தம்பி

Rahul Tiky: ‘எல்லாத்தையும் சிரிக்க வச்சான்.. இப்ப ஒரேடியா போயிட்டான்; தயவு செஞ்சு பைக்ல வேகமா’ -ராகுல் டிக்கி தம்பி

Kalyani Pandiyan S HT Tamil
Jan 18, 2025 11:55 AM IST

Rahul Tiky: ‘என்னுடைய அண்ணன் எல்லோரையும் ஒரேடியாக அழ வைத்து சென்று விட்டான். நான் உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை தான் வைக்கிறேன். தயவுசெய்து வாகனத்தில் வேகமாக செல்லாதீர்கள்.' - ராகுல் டிக்கி தம்பி

Rahul Tiky: ‘எல்லாத்தையும் சிரிக்க வச்சான்.. இப்ப ஒரேடியா போயிட்டான்; தயவு செஞ்சு பைக்ல வேகமா’ -ராகுல் டிக்கி தம்பி
Rahul Tiky: ‘எல்லாத்தையும் சிரிக்க வச்சான்.. இப்ப ஒரேடியா போயிட்டான்; தயவு செஞ்சு பைக்ல வேகமா’ -ராகுல் டிக்கி தம்பி

இது குறித்து அவர் பேசும் போது, ‘ இன்றைய டிஜிட்டல் உலகத்தில் அனைவரையும் சிரிக்க வைத்த கலைஞன் என்றால் அது என்னுடைய அண்ணன்தான். அவன் பட்ட கஷ்டத்திற்கு இவ்வளவு பேரை சிரிக்க வைத்திருக்கிறான் என்று நினைக்கும் பொழுதே, அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

 

கஷ்டத்தில் இருக்கும் நபர்கள் நம்மை பார்த்து சிரித்தால் அதுவே நமக்கு போதும் என்பான். இன்று என்னுடைய அண்ணன் எல்லோரையும் ஒரேடியாக அழ வைத்து சென்று விட்டான். நான் உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை தான் வைக்கிறேன். தயவுசெய்து வாகனத்தில் வேகமாக செல்லாதீர்கள். உங்கள் வேலையை நீங்கள் ஒழுங்காக பார்க்க வேண்டும் என்றால், ஒரு 5, 10 நிமிடம் முன்னதாக கிளம்புங்கள். அவனுடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள்’ என்று பேசினார்.

சினிமா காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகும் பேச்சுக்கள், வீடியோக்களை தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவை ரீல்களாக வெளியிட்டு பிரபலமானவர் ராகுல் டிக்கி. ஈரோட்டைச் சேர்ந்த இவருக்கு எக்கச்சக்க ரசிகர் பட்டாளம் உண்டு.

இவர் நேற்று முன் தினம் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரவு 10:30 மணி அளவில் கோபி அருகே கவுந்தப்பாடியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் தடுப்பின் மீது மோதியது. இதில் ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து ராகுலின் தம்பியான கிஷோர் பேசும் போது, ‘ ராகுல் கிட்டத்தட்ட நான்கு ஐந்து படங்களில் கமிட்டாகி இருந்தான்; அவனை டெலிவிஷனில் ஒரு சின்ன ரோலில் வந்தால் கூட, அப்படி கொண்டாடினோம். பெரிய ஸ்கிரீனில் வந்தால் எப்படியெல்லாம் அவன் வருவான் என்று யோசித்து வைத்திருந்தோம். ஆனால்,இன்று அவன் எங்களுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று ஸ்டேட்டஸ் போட வைத்து விட்டான்.

ஹெல்மெட் போட்டுதான் பைக் ஓட்டுவான். நேற்றும் அவன் அப்படித்தான் பைக்கை ஓட்டினான்.ஹெல்மெட் போட்டு இருந்தும், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது எப்படி என்று எங்களுக்கு தெரியவில்லை; அந்த ஹெல்மட்டை அவரது தலையிலிருந்து எங்களால் கழற்றக் கூட முடியவில்லை.

ஊரையே சந்தோஷமாக

ஊரையே அவன் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பான்; ஒருவனுக்கு என்ன கஷ்டமாக இருந்தாலும், அவன் நம்மை பார்க்கும் பொழுது சிரிக்க வேண்டும் என்று சொல்வான். மனுஷன் ஒவ்வொருவரையும் அப்படி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான். ஆனால் என் அண்ணன் இன்று எல்லோரையும் ஒட்டுமொத்தமாக அழ வைத்து சென்று விட்டான்.

நிறைய நல்லது

மறைமுகமாக பல நல்ல விஷயங்களை அவன் செய்திருக்கிறான். அதனை, உடனிருந்த எங்களிடம் கூட சொல்லவில்லை. ஒவ்வொரு நாளிலும் இதை நீ செய் என்று எடுத்துக் கொடுக்கும் பொழுதுதான், எனக்கு அவன் இப்படியான விஷயங்களை செய்கிறான் என்பது தெரிய வந்தது.

வாரமானால் கிறிஸ்துவ தேவாலயங்களில் முடியாதவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது, வெள்ளிக்கிழமையானால் இஸ்லாமியர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது என்று, பல நல்ல விஷயங்களை அவன் செய்து வந்தான். அவன் இங்கு எல்லோரையும் சிரிக்க வைத்ததாலோ என்னமோ, இனி மேலே சிரிக்க வைக்கலாம் என்று கடவுள் அவனை அழைத்துக்கொண்டார் என்று நினைக்கிறேன்’ என்று பேசினார்

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.