Dr Diwakar on Mysskin: ‘பகிரங்க மன்னிப்பு கேளுங்க மிஷ்கின்.. என் பின்னாடி உலகமே இருக்கு..’ -கொதித்த திவாஹர்
Dr Diwakar on Mysskin: உங்களுக்கு 50 வயது மேல் ஆகிவிட்டது நீங்கள் எல்லோருக்கும் முன்னோடியாக திகழ வேண்டும். அதை விடுத்து நீங்கள் மற்றவர்களிடம் இருந்து அறிவுரை வாங்கும் அளவுக்கு நடந்து கொள்ளக் கூடாது. - மிஷ்கினுக்கு திவாஹர் பதிலடி
Dr Diwakar on Mysskin: பாட்டில் ராதா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சோசியல் மீடியாவில் கவனம் பெற்ற இன்ஸ்டா பிரபலம் திவாகர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அட்வைஸ் செய்ய வேண்டுமே
இது குறித்து அவர் கொடுத்திருக்கும் பதிலடியில், ‘மிஷ்கின் சார் நீங்கள் நிறைய சமுதாய சீர்திருத்த திரைப்படங்களை எடுக்க வேண்டும். நீங்கள் தான் எங்களுக்கு அட்வைஸ் செய்ய வேண்டுமே தவிர, நாங்கள் உங்களுக்கு அட்வைஸ் செய்யக்கூடாது.
உங்களுக்கு 50 வயது மேல் ஆகிவிட்டது நீங்கள் எல்லோருக்கும் முன்னோடியாக திகழ வேண்டும். அதை விடுத்து நீங்கள் மற்றவர்களிடம் இருந்து அறிவுரை வாங்கும் அளவுக்கு நடந்து கொள்ளக் கூடாது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் நீங்கள் அப்படி அநாகரிகமாக பேசி இருக்கக் கூடாது; அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு சிறுவனை குறிப்பிட்டு நடித்துக் காண்பித்தார்.