பட்டாம் பூச்சி முதல் கலாபக் காதலன் வரை.. 35 வது பிறந்தநாள்.. காதலனுடன் கோவாவில் லூட்டி! -நடிகை தமன்னா ஷேரிங்ஸ்
பட்டாம் பூச்சி வீடியோ, ஸ்ம்மிங் ஃபுல் முன்னால் ஆனந்தமாக இருப்பது, வீடியோ டாய்ஸ்களுடன் கேம் விளையாடும் வீடியோ, காதலனின் புகைப்படம் உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கிறது.
நடிகை தமன்னா கடந்த டிசம்பர் 21ம் தேதி தன்னுடைய 35 வது பிறந்தநாளை கொண்டாடினார். கோவாவில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், அவரது காதலரும், பாலிவுட் நடிகருமான விஜய் வர்மா மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.
இது தொடர்பான புகைப்படங்களை தமன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் நண்பர்களுடன் தூங்குவது, பட்டாம் பூச்சி வீடியோ, ஸ்ம்மிங் ஃபுல் முன்னால் ஆனந்தமாக இருப்பது, வீடியோ டாய்ஸ்களுடன் கேம் விளையாடும் வீடியோ, காதலனின் புகைப்படம் உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கிறது.
தமன்னாவுக்கு 35 வயது
இதனை பார்த்த ரசிகர் ஒருவர், ‘முற்றிலும் அழகாக இருக்கிறது,’ என்று ஒரு ரசிகர் எழுதிருக்கிறார். மற்றொரு ரசிகர் ‘அற்புதமான மற்றும் அழகான பெண்கள்’ என்று எழுதி இருக்கிறார். இன்னொருவர் ‘நைஸ் மேடம், உங்கள் வாழ்க்கையில் பல இனிமையான நினைவுகளை ஒரு சொத்தைப் போல சேமித்து வையுங்கள்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
தமன்னா கடைசியாக சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் த்ரில்லர்-சிக்கந்தர் கா முகதார் படத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்ட்ரீ 2 என்ற வெற்றிப் படத்தில், குறிப்பாக ஆஜ் கி ராத் பாடலுக்காக அவர் தனது கேமியோவில் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
டாபிக்ஸ்