தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Information About Who Will Direct Ilayaraja's Biographical Story Is Now Out

Illayaraja Biopic : இத யாரும் எதிர்பார்கல.. இளையராஜாவின் பயோபிக்கில் நடிகர் தனுஷ்.. இயக்க போவது யார் தெரியுமா?

Divya Sekar HT Tamil
Mar 19, 2024 09:11 AM IST

Illayaraja Biopic : இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

இளையராஜாவின் பயோபிக்கில் நடிகர் தனுஷ்
இளையராஜாவின் பயோபிக்கில் நடிகர் தனுஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே தற்போது நடிகர் தனுஷ் பிரபல இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க இருக்கிறார். பாலிவுட் இயக்குநர் பால்கி இப்படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

அடிப்படையில் இசைஞானி இளையராஜாவும், தனுஷும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள். இளையராஜாவுக்கு பண்ணைப்புரம் என்றால், தனுஷுக்கு மல்லிங்காபுரம் சொந்த ஊர். இளையராஜாவின் மனைவியும், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் சிறுவயதில் ஒன்றாக படித்தவர்கள். இதனால் இளையராஜாவின் மேனரிசங்கள், மொழி, நடை அனைத்தும் தனுஷ் அப்படியே நடித்து அசத்துவார். இதனை படக்குழுவே சொல்லி உள்ளது.

அன்றைய பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் (தற்போது தேனி மாவட்டம்) உள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. 1976 ஆம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுத வெளியான படம் தான் அன்னக்கிளி. இப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இசைஞானி இளையராஜா. அதனை தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் இசையமைத்து மக்களை தன்வசப்படுத்தினார். இவரது 1000 ஆம் படம் இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை. இப்படத்தைல் இடம்பெற்ற பாடல்களும் செம ஹிட்.

இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுப்பது என்னும் பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இளையராஜாவின் தீவிர ரசிகர் தனுஷ், அதேபோல தான் இளையராஜாவின் தீவிர ரசிகன் பால்கி. எனவே இருவரது கூட்டணியில் இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும், பேசப்படும் படமாக இருக்கும் என எதிர்பார்ப்பு அனைவருக்கு இருந்தது. ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி இளையராஜாவின் பயோபிக்கை அதாவது வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் பால்கி இயக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜா வேறொரு இயக்குநரை தேர்வு செய்து வருகின்றார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் அருண் மாதீஸ்வரனை இளையராஜா தனது வாழ்க்கை வரலாற்றை இயக்க தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் மாதீஸ்வரன் ஆக்சன் படங்களை மட்டுமே இயக்கி வருகிறார். இந்நிலையில் அருண் மாதீஸ்வரனை இளையராஜா தேர்வு செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராக்கி, சாணி காயிதம் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கிய திரைப்படங்கள் ஆகும். வன்முறை கலந்த கதைகளத்தோடு இத்திரைப்படங்கள் அமைந்திருக்கும். இப்படத்தை இயக்குவதன் மூலம் கேப்டன் மில்லர் திரைபடத்திற்கு பிறகு தனுஷ் இயக்குநர் அருண் மதேஷ்வரன் இணையும் இரண்டாவது திரைப்படமாக இந்த பயோபிக் திரைப்படம் இருக்க போகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராஜா

இந்திய சினிமாவின் இசைக்கு முகவரி எழுதியவர். தன் இசையால் கம்பீரம் கொடுத்தவர். ஸ்வரங்களாலும் மெட்டுக்களாலும் தன் சாம்ராஜ்யத்திற்கான கோட்டையை கட்டி இன்றும் மகக்ள் மனதில் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கிறார். மக்களின் மனம் கவர்ந்த கள்வன் என்றே இவரை சொல்லலாம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

நடிகர்கள் ரஜினி, கமல், மோகன், ராமராஜன் போன்றோரின் சினிமா வாழ்க்கைகைக்கு அஸ்திவாரமிட்டதில் இளையராஜாவின் பங்கும் அளப்பரியது.

பாடல்கள் - 7000 த்திற்கு மேற்பட்ட

படங்கள் - 1000த்திற்கும் மேற்பட்ட

இசைக்கச்சேரிகள் - 20,000த்திற்கு மேற்பட்ட

இவ்வாறு பெரும் சாதனை படைத்திருக்கும் இளையராஜாவுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு பத்ம பூஷன் மற்றும் 2010ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்