புஷ்பா 2 வும் இல்ல.. கல்கியும் இல்ல.. பட்ஜெட் 3 கோடி.. லாபம் 45 மடங்கு.. 2024 -ல் அதிக லாபம் சம்பாதித்த படம் எது?
2024 ஆம் ஆண்டு அதிக லாபம் சம்பாதித்த படம் எது தெரியுமா ? - முழு விபரத்தை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

2024ம் ஆண்டில், இரண்டு திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடியை தாண்டி சாதனை படைத்து இருக்கிறது; அதில் ஒன்று புஷ்பா 2, இன்னொன்று கல்கி 2898, ஸ்ட்ரீட் 2 திரைப்படம் 1000 கோடி வசூலுக்கு அருகில் வந்தது. ஆனால் அதனால் 1000 கோடி வசூலை தொட முடியவில்லை.
அதிக பட்ஜெட்.. அதிக லாபம்
இவையெல்லாம் அதிக பட்ஜெட் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு, அதிக லாபம் சம்பாதித்த திரைப்படங்கள்; ஆனால், 2024 -ல் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, அதிக லாபம் சம்பாதித்த திரைப்படம் எது தெரியுமா? அந்தப்படம் மலையாளத்தில் இருந்து வெளியான பிரேமலு திரைப்படம் ஆகும்.
வெறும் 3 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தத்திரைப்படத்தை பார்த்த மக்கள், படம் குறித்து பாசிட்டிவான கருத்துக்களை வெளியே சொல்ல, அந்த விமர்சனங்கள் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்தனர்.