இனி இந்திய சினிமான்னா இந்தி சினிமா மட்டும் இல்ல.. நிரூபித்துக் காட்டிய தென்னிந்திய சினிமா!
இந்திய சினிமா பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சான்டல் உட் என பல முகங்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் இன்றுவரை பாலிவுட் சினிமாவிற்கே முக்கியத்துவம் அளித்து வந்த நிலை இந்த 2024ம் ஆண்டில் மாறியுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய சினிமா பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சான்டல் உட் என பல முகங்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் இன்றுவரை பாலிவுட் சினிமாவிற்கே முக்கியத்துவம் அளித்து வந்த நிலை தான் இருந்தது. ஆனால், 2024ம் ஆண்டு பல்வேறு மொழிகளில் இருந்து வெளியான திரைப் படைப்புகள் அந்த பேச்சுகள் அனைத்தையும் அடித்து நகர்த்தி உள்ளது.
நிரூபித்த தென்னிந்திய சினிமா
இந்த ஆண்டு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, அமரன், புஷ்பா 2 தி ரூல், தி கோட், கல்கி 2898 ஏடி, பைரதி ரணகல், யுஐ போன்ற படங்கள் வெளியாகி உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்திய சினிமா என்றால் அது பாலிவுட் மட்டும் அல்ல என்பது நிரூபனமாகி உள்ளது.
இந்த நிரூபனத்திற்கு மேல குறிப்பிட்ட படங்கள் மட்டுமே காரணமா என்றால் அது இல்லை. ஒவ்வொரு மொழிப் படங்களும் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஒவ்வொன்றும் தங்கள் படைப்புகளை சிறு பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை செலவழித்து தன் திறமைகளை நிரூபித்துள்ளது. இதன் காரணமாக தென்னிந்திய மொழி சினிமாக்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டப் பெற்றன.
தெலுங்கு சினிமா
தெலுங்கு சினிமாவில் வெளியான ஹனுமன், சரிபோதா சனிவாரம், தில்லு ஸ்கொயர் மற்றும் மாது வடலாரா 2 போன்ற படங்கள் மக்களிடமிருந்து அதிக கவனத்தை ஈர்த்தன, அதே சமயம், ரோஹித்-சசியின் இண்டி திரைப்படமான டபுள் என்ஜின், இரட்டைத் தலை பாம்பைத் தேடும் நண்பர்களைப் பற்றிய கதை, நல்ல விமர்சனங்களைப் பெற்றது. துஷ்யந்த் கடிகானேனியின் அம்பாஜிபேட்டா திருமண இசைக்குழு சாதி அரசியலில் சிக்கிய இரட்டையர்களின் கதையைச் சொல்லி மக்களின் வாழ்வியலை பேசியது.
தமிழ் சினிமா
மகாராஜா, மெய்யழகன், விடுதலை பார்ட் 2 ஆகிய படங்கள் தங்கள் வெற்றியை உறுதி செய்த நிலையில் லப்பர் பந்து, வாழை, டிமான்டி காலனி 2 போன்ற படங்களும் தங்கள் பங்குக்கு வெற்றியை வாரிக் குவித்து வித்தியாசமான படங்களுக்கு என்றும் மக்கள் மனதில் இடம் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது. தமிழரசன் பச்சைமுத்துவின் லப்பர் பந்து படம் ஒரு காதல் உறவால் கிரிக்கெட் போட்டி எவ்வாறு மாறுகிறது. என்பது பற்றி பேசியது. மாரி செல்வராஜின் வாழை 12 வயது சிறுவனின் பார்வையில் தொலைந்து போன குழந்தைப் பருவத்தின் கருத்தை ஆராய்ந்தது. ஆர்.அஜய் ஞானமுத்துவின் டிமான்டி காலனி 2 ஹாரர் காமெடி படங்களுக்கு உள்ள மவுசை காட்டுகிறது.
கன்னட சினிமா
இந்திய சினிமாவில் சமீப காலம் வரை மிகவும் கவனிக்கப்படாத திரைப்படத் துறையாக உள்ளது கன்னட சினிமா தான். அந்த சினிமாவை அடையாளப்படுத்தியதே கேஜிஎஃப் திரைப்படம் தான். ஆனால் இந்த ஆண்டு உபேந்திராவின் யுஐ, மேக்ஸ், பகீரா போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பெற்று கன்னட சினிமாவின் கதவுகளை திறந்துவிட்டது.
மலையாள சினிமா
எப்போதும் போல மலையாள சினிமாவுக்கு ஒரு நட்சத்திர ஆண்டாகவே இந்த வருடம் இருந்தது. மலையாள சினிமா தொடர்ந்து நல்ல கதைகளை உருவாக்கியது. ஆனால் பாயல் கபாடியாவின் கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்ற ஆல் வி இமேஜின் ஆஸ் லைட் படத்தைப் பற்றி குறிப்பிடாமல் இந்த பட்டியல் முழுமையடையாது. மும்பைக்கு புலம்பெயர்ந்த மலையாள பெண்ணின் அனுபவத்தை ஆராயும் கதையாக விரியும் இந்தப் படத்தை தவிர்க்கவே முடியாது. ஆனந்த் ஏகர்ஷியின் ஆட்டம் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.
இப்படி பல படங்கள் தென்னிந்திய சினிமாவின் பல்வேறு பக்கங்களை விளக்கி அதன் வெற்றியை நிரூபித்தது.
டாபிக்ஸ்