தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Indian Cinema First Lady Actress Devika Rani Bithday Today

HBD Devika Rani: இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின்! அறிமுக படத்திலேயே முத்தக் காட்சியில் தூள் கிளப்பிய நடிகை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 30, 2024 05:30 AM IST

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின், தாதா சாஹப் பால்கே விருது வென்ற முதல் இந்தியர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரியாக இருந்து வந்த தேவிகா ராணி தனது அற்புத நடிப்பால் ரசிகர்களின் மனங்களிலும் குடி புகுந்திருக்கிறார்.

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் தேவிகா ராணி
இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் தேவிகா ராணி

ட்ரெண்டிங் செய்திகள்

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை பூர்வீகமாக கொண்ட இவர் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். தனது 9வது வயதிலேயிலே பிரட்டனுக்கு படிப்புக்காக அனுப்பி வைக்க பட்டார்.

அங்கு கல்லூரி படிப்பு வரை படித்து முடித்த தேவிகா ராணி, இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஹிமான்ஷு ராய் என்பவரை சந்திக்கிறார். இருவருக்கும் காதல் பற்றிக்கொள்ள திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ராய் உருவாக்கிய சைலண்ட் படத்தில் உதவியாளராக பணியாற்றினார் தேவிகா ராணி. பின்னர் இருவரும் பெர்லினின் சினிமா பற்றி படிப்பை பயின்றார்கள்.

முதல் ஹீரோயின்

ஒரே நேரத்தில் ஆங்கிலம், தமிழ் மொழியில் உருவான கர்மா என்ற படத்தில் தேவிகா ராணியை ஹீரோயினாக நடிக்க வைத்தார் ஹிமான்ஷு ராய். இந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரம் தோன்றியது இந்த படத்தில் என கூறப்படுகிறது. இங்கிலாந்தில் ப்ரீமியர் செய்யப்பட்ட இந்த படம் இந்தியாவில் தோல்வியை தழுவியது.

நீண்ட முத்த காட்சிகள்

முதல் ஹீரோயினாக நடித்த படத்திலேயே, மிக நீண்ட லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் பம்போ சென்ற இந்த நட்சத்திர ஜோடிகள் பாம்பே டாக்கீஸ் என்ற பெயரில் ஸ்டுடியோ ஒன்றை நிறுவியது.

தொடர்ச்சியாக 1940கள் வரை திரைப்படங்களில் நடித்தார் தேவிகா ராணி. அந்த காலகட்டத்தில் அசோக் குமாருடன் இவர் இணைந்து நடித்த படங்கள் பரவலாக பேசப்பட்டது. இந்தியா முழுவதும் பிரபலமான ஜோடிகளாக இவர்கள் மாறினர்.

நடிப்பிலிருந்து விலகல்

கணவர் ஹிமான்ஷு ராய் இறப்புக்கு பின்னர் கணவரின் சகாக்களுடன் இணைந்து திரைப்படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார் தேவிகா ராணி. 1945ஆம் ஆண்டுக்கு பிறகு நடிப்பிலிருந்து விலகினார். இவர் தயாரித்த படங்கள் தோல்வியை தழுவுவதும், சராசரி வசூலை பெறுவதுமாக இருந்தது.

பின்னர் திரைப்பட தயாரிப்பையும் நிறுத்திவிட்டு ரஷ்யாவை சேர்ந்த பெயிண்டரான ஸ்வெடோஸ்லாவ் ரோரிச் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களுருவில் செட்டிலானார்.

நடிகையாக இருந்தபோது ரெமான்ஸ் டிராமா படங்களில் தோன்றி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்த கூடியவராக இருந்துள்ளார்.

தேவிகா ராணிக்கு கெளரவம்

இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாஹப் பால்கே விருது, பத்மஸ்ரீ விருது வழங்கி தேவிகா ராணி கெளரவிக்கப்பட்டார். நடிகையாக மட்டுமில்லாமல் பேஷன் டிசைனராகவும் இவர் இருந்துள்ளார். அத்துடன் தாதா சாஹப் விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றவராக உள்ளார். இவரது உருவம் பொருந்திய ஸ்டாம்புகளும் 2011இல் இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

இந்திய சினிமாவின் பெண்களுக்கான என்ட்ரியாக இருந்துள்ள தேவிகா ராணியின் 116வது பிறந்தநாள் இன்று.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்