‘இதெல்லாம் நாங்க எதிர்பார்க்கவே இல்ல.. எல்லாம் சுக்கு நூறாயிடுச்சி.. இந்தியன் 3 நிச்சயம் வரும்..’ டைரக்டர் ஷங்கர்
இந்தியன் 2 படத்திற்கு இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வரும் என நாங்கள் யாரும் எதிர்பார்க்க வில்லை. இதற்காக நாங்கள் பெரிய உழைப்பை கொடுத்துள்ளோம் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தைபிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார். ராம் சரண் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தில் ராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தில் ராஜ் மற்றும் ஷிரிஷ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
கேம் சேஞ்சர் படத்தை ஷங்கர் நேரடி தெலுங்கு படமாக இயக்கியதன் மூலம் டோலிவுட் சினிமாவில் தன் முதல் காலடி தடத்தை பதித்துள்ளார். இந்தப் படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் நிலையில், இயக்குநர் ஷங்கர் விகடன் இதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் க்ளிக் ஆன படம்
அரசியல் ஆக்ஷன் திர்ல்லர் பாணியில் உருவாகியிருக்கும் படத்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார். கொரோனா காலகட்டத்தில் வெளியில் யாரவது நல்ல கதைகள் வைத்திருந்தால் அதை படமாக எடுக்கலாம் என்று நினைத்த போது, இயக்குநர் லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதை பற்றி கூறினார்.
அந்தக் கதை தனக்கு பிடித்துப் போனதால் அதை படமாக எடுக்க தீர்மானித்தோம்.
அதிகாரி- அரசியல்வாதிக்கான போராட்டம்
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ், ராம் சரண் இந்தப் படத்தின் கதாநாயகனாக இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். அதனால் உடனே அவரிடம் இந்தப் படம் பற்றி பேசினோம். இந்தப் படம் அவர் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிப்பதற்கு முன்பே உறுதி செய்யப்பட்டது. ஆரசியல் ஆக்ஷன் நிறைந்த இந்தப் படம் அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியன்2வில் நல்ல சிந்தனை
பலரும் நான் இந்தியன் 2 விமர்சனத்தால் சோர்வடைந்ததாக கூறுகின்றனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியன் 2 திரைப்படத்தின் மூலம் ஒரு நல்ல சிந்தனையை சொல்ல முயற்சித்தேன். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி தான். வீடு சுத்தமாக இருந்தால், தேசம் சுத்தமாகும் என்பது அற்புதமான மற்றும் அவசியமான சிந்தனை. அது அதை எப்படி நடைமுறையில் செயல்படுத்த முடியும் என்ற கேள்வி இன்னும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
இந்தியன் 2 படத்துக்கு இப்படி விமர்சனங்கள் வரும் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. வந்துவிட்டது. இதையடுத்து நாங்கள் அடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்வோம் என்று எங்கள் வேலைக்கு தயாராகி விட்டோம்.
எங்கள் உழைப்பு பெரியது
அந்தப் படத்திற்கு நானும் கமல் சாரும் கொடுத்த உழைப்பு பெரியது. படக்குழுவினர் அனைவரின் உழைப்பும் படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களால் சுக்கு நூறாகி விட்டது. இருந்தாலும் பரவாயில்லை. இந்தியன்3 திரைப்படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.
இந்தியன் 2 எஃபெக்ட்
தெலுங்கானாவில் உள்ள மாநகராட்சி பெண் பொறியாளர் ஒருவர் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வந்ததை அவரது கணவரே வீடியோ எடுத்து வெளியிட்டார். இது இந்தியன் 2 படத்தின் எதிரொலி என பலரும் கூறினர். அதேபோல், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவரது ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் இருந்து செயினை பறித்து கொண்டு சென்றார். இதை தெரிந்து கொண்ட ஆட்டோ டிரைவரின் மகன் அவரை போலீசில் பிடித்து கொடுத்தார். இதையும் இந்தியன் படத்தோடு ஒப்பிட்டு பேசினர்.
தியேட்டரில் தான் ரிலீஸ்
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் நாம் சொல்ல வந்த கருத்து பதிவாகி விட்டது. அதனால் எங்களுக்கு இவை சந்தோஷத்தை தான் அழித்தது. இந்தியன் 3 படம் ஓடிடியில் வெளியாகும் என பல தரப்பில் இருந்தும் செய்திகள் வந்தது. அது எல்லாம் தவறானது. இந்தியன் 3 நிச்சயம் தியேட்டரில் தான் வரும் என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.