Indian 2 OTT Release: சோதனை மேல் சோதனை..! பணத்தை திரும்ப கோரும் நெட்பிளிக்ஸ்? தள்ளிப்போன இந்தியன் 2 பட ஓடிடி ரிலீஸ்
Indian 2 OTT Release Delayed: ஆக்ஸட் 2ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படத்துக்கு சோதனை மேல் சோதனையாக, படத்தை வெளியிடுவதாக இருந்த ஓடிடி தளம் பணத்தைத் திரும்பக் கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் படத்தின் ஓடிடி வெளியீடு தள்ளிபோயுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் - பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி ஜுலை 12ஆம் தேதி திரைக்கு வந்த படம் இந்தியன் 2. மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் எதிர்பார்த்த வசூலை படம் பெறவில்லை. இதையடுத்து படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
பணத்தை திரும்ப கோரும் நெட்பிளிக்ஸ்
முன்னதாக, இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி வெளியீட்டு உரிமையை ரூ. 150 கோடிக்கு பெற்றது நெட்பிளிக்ஸ் நிறுவனம். படத்தின் அனைத்து மொழிப்பதிப்புகளையும் வெளியிடுவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக முன் பணமாக ரூ. 75 கோடியும் செலுத்தியுள்ளது.
ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பையும், வசூலையும் பெறாத நிலையில் அட்வான்ஸாக செலுத்திய தொகையை திரும்ப அளிக்கமாறு படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் படத்தை வெளியிடுவதில் இருந்து நெட்பிளிக்ஸ் பின் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றி உறுதியான தகவல் தெரியவில்லை.
இந்தியன் 2 ஓடிடி புதிய ரிலீஸ் தேதி
இதற்கிடையே படத்தயாரிப்பாளர்கள், நெட்பிளிக்ஸ் தரப்புக்கு மத்தியில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. திரையரங்கில் பார்க்காத பலரும் ஓடிடியிலாவது பார்க்கலாம் என்று காத்திருந்த நிலையில் தற்போது இந்தியன் 2 ஓடிடி வெளியீடு தள்ளிப்போயுள்ளது. அதன்படி படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஸ்டிமீங் ஆகும் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. இருப்பினும் இதுதொடர்பாக முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘இந்தியன் 2’ வசூல்
Sacnilk.com வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, இந்தியன் 2 திரைப்படம் வெளியான அன்றைய தினம் அந்தப்படம், தமிழில் 16.5 கோடி ரூபாயும், இந்தியில் 1.2 கோடி ரூபாயும்,தெலுங்கில் 7.9 கோடியும் வசூல் செய்திருக்கிறது. இரண்டாவது நாளில், தமிழில் 13.5 கோடி ரூபாயும், இந்தியில் 1.2 கோடி ரூபாயும், தெலுங்கில் 2.5 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக பார்க்கும் போது, இரண்டு நாட்களில் இந்தியன் 2 திரைப்படம், தமிழில் 29.3 கோடி ரூபாயும், ஹிந்தியில் 2.4 கோடி ரூபாயும், தெலுங்கில் 10.4 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. ஆக மொத்தத்தில், இந்தியன் 2 திரைப்படம் 2 நாளில் வெறும் 42.3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
கதையின் கரு
இந்தியன் முதல் பாகத்தில், லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும், இந்தியன் தாத்தா கொல்வதை மைய கருவாக வைத்து கதை சொல்லி இருந்தார் இயக்குநர் ஷங்கர். தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகத்திலும், அதுதான் மையக்கரு. ஒரே வித்தியாசம், தற்போதைய தலைமுறையில் லஞ்சத்தால் ஏற்படும் பிரச்சினைகளை கருவாக எடுத்து காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் அவ்வளவுதான்.
அந்த பிரச்சினை சம்பந்தமான காட்சிகளை சித்தார்த்தையும், அவர் நடத்தி வரும் யூ- டியூப் சேனல் மூலமாகவும் நகர்த்தி இருக்கும் ஷங்கர், அதன் மூலமாக, பல்லாண்டுகளுக்கு முன்னதாக தாய்பேய்க்கு சென்ற இந்தியன் தாத்தாவிற்கு, சோசியல் மீடியா வழியாக அழைப்பு விடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்