தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Indian 2: ‘நீலோற்பம் நீரில் இல்லை’ - இந்தியன் 2 படத்தில் தெறிக்கும் ரொமான்டிக் பாடல்

Indian 2: ‘நீலோற்பம் நீரில் இல்லை’ - இந்தியன் 2 படத்தில் தெறிக்கும் ரொமான்டிக் பாடல்

Aarthi Balaji HT Tamil
May 29, 2024 01:08 PM IST

Indian 2: ’இந்தியன் 2’ திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிளான ‘நீலோற்பம்’பாடல் வெளியாகி உள்ளது. அனிருத் இசையமைத்து உள்ளார்.

 ‘நீலோற்பம் நீரில் இல்லை’ - இந்தியன் 2 படத்தில் தெறிக்கும் ரொமான்டிக் பாடல்
‘நீலோற்பம் நீரில் இல்லை’ - இந்தியன் 2 படத்தில் தெறிக்கும் ரொமான்டிக் பாடல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியன் 2 திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிளான ‘ நீலோற்பம் ’ பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல் மே 29 ஆம் தேதியான இன்று காலை 11 மணிக்கு வெளியானது.

இப்பாடலை தாமரை எழுதி உள்ளார். அனிருத் இசையமைத்து உள்ளார். இப்பாடலை அபி.வி-யும், ஸ்ருதிகா சமுத்ரலாவும் பாடியுள்ளனர். இப்படம் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகும்

இந்தியன் படம் எப்படிப்பட்டது?

லஞ்சம் கொடுக்காத ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் சந்திக்கும் பிரச்னைகளையும், சமூகத்தை மாற்ற முனையும் அவரது அக்கறையையும் வெளிப்படுத்தி 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், இந்தியன். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இப்படம், அப்போதே 30 கோடி ரூபாய் வரை வருவாயை ஈட்டித்தந்தது.

பின்னர் இயக்குநர் ஷங்கரும், கமல்ஹாசனும் மீண்டும் இணையவே இல்லை. வெவ்வேறு படங்களிலும் வெவ்வேறு இயக்குநர்களுடன் பணியாற்றினர். எந்திரனில் முதலில் கமல்ஹாசனை நடிக்கவைக்க மும்முரம் காட்டினார், ஷங்கர். அதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டைத் தாண்டி, கமல்ஹாசனும் இயக்குநர் ஷங்கரும் மீண்டும் இணையவில்லை.

இந்தியன் 2 உருவான விதம்?

இந்நிலையில், அதன் தொடர்ச்சியான ’இந்தியன் 2’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கமல்ஹாசனை வைத்து மீண்டும் உருவாகிறது என அறிவிக்கப்பட்டது.

அதன்பின், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, சென்னை, ராஜமுந்திரி, போபால், குவாலியர் போன்ற பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. இதன் படப்பிடிப்புக்கு மத்தியில், பிப்ரவரி 2020ல் படக்குழுவில் ராட்சத கிரேன் விழுந்ததில் சிலர் உயிரிழந்தனர்.

அதன்பின், சூட்டிங் தொடங்கினாலும் கோவிட் பிரச்னை தலைவிரித்தாடியது. இதனால் ஒட்டுமொத்தமாக, இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்பின் சமீபத்தில் 2024 மார்ச் மாதம் மொத்தமாக அதன் படப்பிடிப்பு முடிவடைந்தது.

கடந்த ஆண்டு, நவம்பர் 23 ஆம் ’இந்தியன் 2’ படத்தின் டீஸர் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. அதில் கமல் ஹாசன், ஒரு வெளிநாட்டிலிருந்து தொலைபேசி பூத்தில் பேசத் தொடங்குவதில் இருந்து டீஸர் தொடங்கியது. அதில் நரைத்த தலைமுடி மற்றும் மீசையுடன் வயதான தோற்றத்தில் கமல் ஹாசன் இருந்தார்.

முதல் சிங்கிள்

இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் கடந்த மே 22 ஆம் தேதி வெளியானது. ’பாரா வருவது ஓராட் படையா.. வீரா விழுப்புண் அழகாறா’ என பா.விஜய் எழுதிய பாடல் வெளியாகி ட்ரெண்ட் ஆனது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்