Indian 2 Movie Review: அவதாரங்கள் பல; அடுக்கு மொழி வசனங்கள் சில; பிதற்றும் பிரமாண்டம்;கசக்கும் கமல் - இந்தியன் 2 எப்படி?
இந்தியா வரும் இந்தியன் தாத்தா என்ன செய்தார்? இந்த முறை லஞ்சத்தை ஒழிக்க அவர் கையில் எடுத்த ஆயுதம் என்ன?... லஞ்சத்தை ஒழிக்க அவர் கூற வரும் தீர்வு என்ன? என்பதே படத்தின் கதை. - இந்தியன் 2 எப்படி?
(1 / 5)
Indian 2 Review: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், விவேக், பிரியா பவானி ஷங்கர், மனோபாலா உள்ளிட்ட பலரது நடிப்பில், இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் முதல் பாகத்தின் ஏகோபித்த வெற்றி, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி இருந்த நிலையில், இன்று இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
(2 / 5)
கதையின் கரு
இந்தியன் முதல் பாகத்தில், லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும், இந்தியன் தாத்தா கொல்வதை மைய கருவாக வைத்து கதை சொல்லி இருந்தார் இயக்குநர் ஷங்கர். தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகத்திலும், அதுதான் மையக்கரு. ஒரே வித்தியாசம், தற்போதைய தலைமுறையில் லஞ்சத்தால் ஏற்படும் பிரச்சினைகளை கருவாக எடுத்து காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் அவ்வளவுதான்.
அந்த பிரச்சினை சம்பந்தமான காட்சிகளை சித்தார்த்தையும், அவர் நடத்தி வரும் யூ- டியூப் சேனல் மூலமாகவும் நகர்த்தி இருக்கும் ஷங்கர், அதன் மூலமாக, பல்லாண்டுகளுக்கு முன்னதாக தாய்பேய்க்கு சென்ற இந்தியன் தாத்தாவிற்கு, சோசியல் மீடியா வழியாக அழைப்பு விடுகிறார்.
(3 / 5)
இந்தியா வரும் இந்தியன் தாத்தா
இதனையடுத்து இந்தியா வரும் இந்தியன் தாத்தா என்ன செய்தார்? இந்த முறை லஞ்சத்தை ஒழிக்க அவர் கையில் எடுத்த ஆயுதம் என்ன?... லஞ்சத்தை ஒழிக்க அவர் கூற வரும் தீர்வு என்ன? என்பதே படத்தின் கதை.
(4 / 5)
மிரட்டலான நடிப்பில் கமல் ஹாசன்
வழக்கம் போல கெட்டப்பிலும், நடிப்பிலும் கமல் ஹாசன் மிரட்டுகிறார். இந்தியன் தாத்தாவிற்கே உரித்தான கிடுக்கிலும், மிடுக்கிலும் அரட்டுகிறார். அவரை சுற்றியே பெரும்பான்மையான கதை நகர்வதால், இதர கதாபாத்திரங்கள் பெரிதாக கவனம் பெறவில்லை. ஆனாலும் கொடுத்த கதாபாத்திரத்துக்கு நடிகர்கள் நியாயம் செய்து இருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகளில் கமல் ஹாசன் பயன்படுத்தும் வர்ம முறைகள் ரசிக்க வைக்கின்றன. வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன.
இசை
ஏ. ஆர் ரஹ்மான் அளவிற்கு இல்லையென்றாலும், தன்னால் முடிந்த அளவு இசை கொடுத்து, படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார்அனிருத். திரைக்கதையின் வேகத்திற்கு ரவி வர்மாவின் கேமரா கண்கள் நகரும் விதம் அற்புதம்.
(5 / 5)
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
முந்தைய பாகத்தில் இடம் பெற்ற காட்சிகளின் அழுத்தம், இந்த பாகத்தில் இல்லாத காரணத்தால் இந்தியன் தாத்தா ஒரு கட்டத்துக்கு மேல் சோதிக்க ஆரம்பித்து விடுகிறார். காதல், ரொமான்ஸ், கருத்து, ஆக்ஷன், காமெடி கலந்து கட்டி அடிக்கும் ஷங்கர், இதில் கருத்து ஒன்றை மட்டுமே பிரமாண்டத்தின் வாயிலாக கடத்த முயன்று இருந்தது படத்தின் பெரும் பலவீனம்.
மக்கள் தொகையில் சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் சொற்பமானவர்களே. அப்படி இருக்கும் போது, அதை வைத்தே பெரும் சாதனை புரிவது போன்ற காட்சிகளை வைத்திருப்பது அபத்தம். இளைஞர்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதான் ஒரே வழி என்ற கருத்து உண்மை என்றாலும், அது தொடர்பான காட்சிகளில் அழுத்தமும், தாக்கமும் இல்லாமல் போனது ஏனோ? கருத்து கந்த சாமியோடு சேர்ந்த ஷங்கரின் ரெகுலரான கலவையும் படத்தில் இருந்த்திருந்தால் இந்தியன் 2 இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் இயக்குநர் ஷங்கர்.
மற்ற கேலரிக்கள்