Indian 2 Collection: கதறவிட்ட கமல் ஹாசன்.. இந்தியன் 2 வசூலின் முதல் நாளே இப்படியா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Indian 2 Collection: கதறவிட்ட கமல் ஹாசன்.. இந்தியன் 2 வசூலின் முதல் நாளே இப்படியா?

Indian 2 Collection: கதறவிட்ட கமல் ஹாசன்.. இந்தியன் 2 வசூலின் முதல் நாளே இப்படியா?

Aarthi Balaji HT Tamil
Published Jul 13, 2024 09:31 AM IST

Indian 2 Collection: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படம், வெளியாகி இருக்கும் நிலையில் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம்.

கதறவிட்ட கமல் ஹாசன்.. இந்தியன் 2 வசூலின் முதல் நாளே இப்படியா?
கதறவிட்ட கமல் ஹாசன்.. இந்தியன் 2 வசூலின் முதல் நாளே இப்படியா?

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படம், வெளியாகி இருப்பதை கமல் ஹாசன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

முதல் நாள் வசூல்

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படம் முதல் நாள் உலகம் முழுவதும் சுமார் 60 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

கதையின் கரு

இந்தியன் முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கி மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும், இந்தியன் தாத்தா கொல்வதை மைய கருவாக வைத்து கதை சொல்லி இருந்தார் இயக்குநர் ஷங்கர்.

தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகத்திலும், அதுதான் மையக்கரு. வித்தியாசம் என்னவென்றால், தற்போதைய தலைமுறையில் லஞ்சத்தால் ஏற்படும் பிரச்சினைகளை கருவாக எடுத்து காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் அவ்வளவு தான்.

அந்த பிரச்னை சம்பந்தமான காட்சிகளை சித்தார்த்தையும், அவர் நடத்தி வரும் யூ- டியூப் சேனல் மூலமாக நகர்த்தி இருக்கும் ஷங்கர், அதன் மூலமாக பல்லாண்டுகளுக்கு முன்னதாக தாய்பேய்க்கு சென்ற இந்தியன் தாத்தாவிற்கு சோசியல் மீடியா வழியாக அழைப்பு விடுகிறார்.

இந்தியா வரும் இந்தியன் தாத்தா

இதனையடுத்து இந்தியா வரும் இந்தியன் தாத்தா என்ன செய்தார்? இந்த முறை லஞ்சத்தை ஒழிக்க அவர் கையில் எடுத்த ஆயுதம் என்ன?... லஞ்சத்தை ஒழிக்க அவர் கூற வரும் தீர்வு என்ன? என்பதே படத்தின் கதை.

இசை

ஏ. ஆர் ரஹ்மான் அளவிற்கு இல்லையென்றாலும் தன்னால் முடிந்த அளவு இசை கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார். திரைக்கதையின் வேக த்திகிற்கு ரவி வர்மாவின் கேமரா கண்கள் நகரும் விதம் அற்புதம்.

படக்குழு

சித்தார்த், சித்ரா வரதராஜனாக நடித்து உள்ளார். மற்ற குறிப்பிடத்தக்க வேடங்களில் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், ஆர்த்தியாக பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், இன்ஸ்பெக்டராக கிருஷ்ணசாமியாக நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், தம்பேஷ், குல்ஷன் குரோவர், ஜாகீர் ஆகியோர் நடித்து உள்ளனர்.

ஹுசைன், பியூஷ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா, ஜெயபிரகாஷ், ஜி. மாரிமுத்து, ஜார்ஜ் மேரியன், வினோத் சாகர், யோகராஜ் சிங், ரேணுகா, கல்யாணி நடராஜன், சி. ரங்கநாதன், பெனடிக்ட் காரெட், ரவி வெங்கட்ராமன், சேரன்ராஜ், டெமி - லீ டெபோ ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்து உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.