Indian 2: ‘நீலோற்பம் நீரில் இல்லை’ - பழந்தமிழ் வார்த்தைகளில் ரொமான்ஸ்; நாளை வருகிறது இந்தியன் 2 இரண்டாவது சிங்கிள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Indian 2: ‘நீலோற்பம் நீரில் இல்லை’ - பழந்தமிழ் வார்த்தைகளில் ரொமான்ஸ்; நாளை வருகிறது இந்தியன் 2 இரண்டாவது சிங்கிள்!

Indian 2: ‘நீலோற்பம் நீரில் இல்லை’ - பழந்தமிழ் வார்த்தைகளில் ரொமான்ஸ்; நாளை வருகிறது இந்தியன் 2 இரண்டாவது சிங்கிள்!

Marimuthu M HT Tamil
May 28, 2024 08:17 PM IST

Indian 2: ’இந்தியன் 2’ திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிளான ‘நீலோற்பம்’பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் பாடல் நாளை வெளியாகியுள்ளது.

Indian 2: ‘நீலோற்பம் நீரில் இல்லை’ -  பழந்தமிழ் வார்த்தைகளில் ரொமான்ஸ்; நாளை வருகிறது இந்தியன் 2 இரண்டாவது சிங்கிள்!
Indian 2: ‘நீலோற்பம் நீரில் இல்லை’ - பழந்தமிழ் வார்த்தைகளில் ரொமான்ஸ்; நாளை வருகிறது இந்தியன் 2 இரண்டாவது சிங்கிள்!

இந்தியன் படம் எப்படிப்பட்டது?

லஞ்சம் கொடுக்காத ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் சந்திக்கும் பிரச்னைகளையும், சமூகத்தை மாற்ற முனையும் அவரது அக்கறையையும் வெளிப்படுத்தி 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், இந்தியன். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இப்படம், அப்போதே 30 கோடி ரூபாய் வரை வருவாயை ஈட்டித்தந்தது.

பின்னர் இயக்குநர் ஷங்கரும், கமல்ஹாசனும் மீண்டும் இணையவே இல்லை. வெவ்வேறு படங்களிலும் வெவ்வேறு இயக்குநர்களுடன் பணியாற்றினர். எந்திரனில் முதலில் கமல்ஹாசனை நடிக்கவைக்க மும்முரம் காட்டினார், ஷங்கர். அதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டைத் தாண்டி, கமல்ஹாசனும் இயக்குநர் ஷங்கரும் மீண்டும் இணையவில்லை.

இந்தியன் 2 உருவான விதம்?:

இந்நிலையில், அதன் தொடர்ச்சியான ’இந்தியன் 2’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கமல்ஹாசனை வைத்து மீண்டும் உருவாகிறது என அறிவிக்கப்பட்டது. அதன்பின், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, சென்னை, ராஜமுந்திரி, போபால், குவாலியர் போன்ற பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. இதன் படப்பிடிப்புக்கு மத்தியில், பிப்ரவரி 2020ல் படக்குழுவில் ராட்சத கிரேன் விழுந்ததில் சிலர் உயிரிழந்தனர்.

அதன்பின், சூட்டிங் தொடங்கினாலும் கோவிட் பிரச்னை தலைவிரித்தாடியது. இதனால் ஒட்டுமொத்தமாக, இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்பின் சமீபத்தில் 2024 மார்ச்சில் மொத்தமாக அதன் படப்பிடிப்பு முடிவடைந்தது.

ட்ரெண்டிங் ஆன இந்தியன் 2 டீஸர்:

கடந்தாண்டு, நவம்பர் 23ஆம் ’இந்தியன் 2’ படத்தின் டீஸர் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. அதில் கமல்ஹாசன், ஒரு வெளிநாட்டிலிருந்து தொலைபேசி பூத்தில் பேசத் தொடங்குவதில் இருந்து டீஸர் தொடங்கியது. அதில் நரைத்த தலைமுடி மற்றும் மீசையுடன் வயதான தோற்றத்தில் கமல்ஹாசன் இருந்தார்.

அதில் கமல்ஹாசன், "எங்கு அநீதி நடந்தாலும், நான் தோன்றுவேன். இந்தியன் சாகாவரம் பெற்றவன் நான்" எனக் கூறுகிறார். அதன்பின், ஒரு கப்பலில் ஹெலிகாப்டர் தரையிறங்க இருப்பதுபோல காட்டப்படுகிறது.

பணக்காரர்கள் ஆடம்பரங்களுக்காக கணக்கிலடங்கா பணத்தை எவ்வாறு வீணாகச் செலவழிக்கிறார்கள் என்பதையும், ஏழைகள் தங்கள் வேலையை முடிக்க அதிக லஞ்சம் கொடுக்கிறார்கள் என்பது போன்றும் பல காட்சிகள் இந்தியன் 2 படத்தின் டீஸரில் இருந்தன. மேலும் ஒரு அரசு ஊழியர் ரூ.6.5 லட்சம் லஞ்சத்தை மறுத்து, ரூ.8 லட்சம் கேட்கிறார். மறுபுறம், மற்றொரு அரசு ஊழியர் முழு லஞ்சத் தொகையையும் வழங்கவில்லை என்பதற்காக ஒப்பந்தத்தை நிராகரிக்கிறார்.

நாடு முழுவதும் இழைக்கப்பட்ட அநீதியின் அதிகமான காட்சிகள் காட்டப்படுவதால், பலர் தங்களுக்கு நல்லது செய்த பழைய சுதந்திரப் போராட்ட வீரரை அழைக்க #ComeBackIndian என்ற ட்வீட்டைப் பதிவுசெய்கின்றனர்.

ஒரு நபர் தனது ஆதார் அட்டையுடன் மாறுவேடமிட்ட எலியின் பெரிய உரோமம் கொண்ட தலையை அணிந்திருப்பதைக் காணமுடிகிறது. இந்தியனுக்கு அழைப்பு விடுப்பது போல மக்கள் தட்டுகளை அடிப்பது காட்டப்படுகிறது.

சித்தார்த் தனது மார்பில் ரூபாய் நோட்டுகள் அடங்கிய சட்டை அணிந்திருப்பதையும் காண முடிகிறது. மேலும் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் ஆகியோரும் டீஸரில் இடம்பெற்று இருந்தனர். இதுவரை 13 மில்லியன் பார்வையாளர்களை டீஸர் பெற்றுள்ளது.

இந்தியன் 2 பாடல்கள்:

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் கடந்த மே 22ஆம் தேதி வெளியானது. ’பாரா வருவது ஓராட் படையா.. வீரா விழுப்புண் அழகாறா’ என பா.விஜய் எழுதிய பாடல் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில்  '’நீலோற்பம் நீரில் இல்லை;

ஏன்தான்டி நான் எல்லை;

ஏதும் தடங்கல் இல்லை’’ என ‘’இந்தியன் 2’’ திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிளான ‘நீலோற்பம்’ பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. 

இந்தப் பாடல் மே 29ஆம் தேதியான நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜூன் 1ஆம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பாடலை தாமரை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்பாடலை அபி.வி-யும், ஸ்ருதிகா சமுத்ரலாவும் பாடியுள்ளனர்.

இப்படம் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.