தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Incar Movie Review Starring Ritika Singh Sandeep Goyat Manish Jhanjholia Gyan Prakash Review Rating

InCar Review: ஓநாய் ஆண்கள்; மானாக சிக்கிய ரித்திகா.. ‘இன் கார்’ படம் எப்படி?

Kalyani Pandiyan S HT Tamil
Mar 02, 2023 11:47 PM IST

ரித்திகாசிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இன் கார் படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

இன் கார் படத்தின் விமர்சனம்!
இன் கார் படத்தின் விமர்சனம்!

ட்ரெண்டிங் செய்திகள்

தன்னுடைய தங்கைக்காக ஒருவரை நெஞ்சில் குத்திவிட்டு ஜெயிலுக்கு சென்ற தம்பியை அவருடைய அண்ணனும், மாமாவும் அழைத்து வருகிறார்கள்; குடி, கஞ்சா, பெண்மோகம் உள்ளிட்டவற்றால் நிரம்பியிருக்கும் தம்பி தன்னுடைய இச்சைக்கு ஒரு பெண் உடனே வேண்டும் என்று அவசரப்படுத்த, ரோட்டில் நின்று கொண்டிருக்கு ரித்திகாவை கொத்தாக தூக்குகிறது அந்தகும்பல்.. அந்த கும்பலிடம் சிக்கிய ரித்திகா என்ன ஆனாள்.. அந்த கார் பயணத்தில் ரித்திகா சந்திக்கும் துன்புறுத்தல்கள் என்னென்ன? என்பதே படத்தின் கதை!

வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பெண்ணாக நடித்திருக்கும் ரித்திகா பல இடங்களில் நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார். ஆண் ஓநாய்களிடம் சிக்குண்ட மானாக அவர் வெளிப்படுத்திய ராவான நடிப்பு நிச்சயம் பாராட்டுக்கு உரியது. கூடவே பயணிக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் சொற்பம் என்றாலும், அவையும் அந்தக்கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை நியாயமாக செய்திருக்கிறது.

இயக்குநர் ஹரிஷ்வர்தன் எவ்வித கேட்பாரன்றி பெண் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்பதை திரையில் அவர்கள் அனுபவிக்கும் வலியோடு சொல்ல நினைத்திருக்கிறார். அந்த முயற்சி அவருக்கு ஓரளவு கையும் கொடுத்திருக்கிறது. ஒரு கார், ரித்திகா உட்பட அதில் மொத்தமே 5 கதாபாத்திரங்கள். இதற்குள் இயக்குநர் அமைத்திருந்த திரைக்கதை நம்மை பெரும்பான்மையான இடங்களில் போரடிக்காமல் பார்த்துக்கொண்டாலும், போகிற போக்கில் அது ஒரு டாக்குமெண்ட்ரியாக மாறிப்போனது மிகப்பெரிய ஏமாற்றம். 

சரி, படம் ஏதோ ஒன்று சொல்லப்போகிறது போல என்று கிளைமேக்ஸ் வரை பல்லைக்கடித்துக்கொண்டு காத்திருந்தால், எதிர்பார்த்ததை விடவும் மிகவும் சாதரண கிளைமேக்ஸாக அது அமைந்தது இன்னும் கொடூரம். பெண்களுக்கு இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை செய்திவழியாகவே நாம் அறிந்திருக்கிறோம். 

அப்படியிருக்கையில் இப்படியான ஒரு விஷ்வல் மீடியத்தை இது பற்றிய இன்னும் முழுமையான பார்வையை எடுத்துச்சொல்ல இயக்குநர் பயன்படுத்தி இருக்கலாம்;இறுதியில் ரித்திகா இடும் ஓலமானது பெண்களின் அடிப்படை சுதந்திரமானது இன்னும் இந்த நாட்டில் கேள்விகுறியாகி நிற்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஆக மொத்தத்தில்  ‘இன் கார்’ ஓடிடியில் பார்க்க வேண்டிய டாக்குமெண்ட்ரி!

IPL_Entry_Point

டாபிக்ஸ்