தமிழ் செய்திகள்  /  Entertainment  /  In This We Will See The Story Of The Song Satti Suttathada Featured In The Movie Aalayamani

Story of Song : ஆழ்ந்த சிந்தனையில் கண்ணதாசன்.. ஐடியா கொடுத்த இயக்குநர்.. சட்டி சுட்டதடா பாடல் உருவான கதை!

Divya Sekar HT Tamil
Jan 03, 2024 05:30 AM IST

ஆலயமணி படத்தில் இடம்பெற்ற சட்டி சுட்டதடா கை விட்டதடா பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

ஆலயமணி படத்தில் இடம்பெற்ற சட்டி சுட்டதடா கை விட்டதடா பாடல் உருவான கதை
ஆலயமணி படத்தில் இடம்பெற்ற சட்டி சுட்டதடா கை விட்டதடா பாடல் உருவான கதை

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்குப் பிறகு தனியாக வளரும் சிவாஜி கணேசன் ஒருமுறை டென்னிஸ் விளையாடும் போது எஸ் .எஸ். ராஜேந்திரனை சந்திக்கிறார். இருவரும் விளையாடும்போது சிவாஜிகணேசனுக்காக தனது வெற்றியை ராஜேந்திரன் விட்டுக்கொடுக்கின்றார். அதிலிருந்து இருவருக்கும் மிகப்பெரிய நட்பு உருவாகின்றது. சிவாஜி கணேசனின் எஸ்டேட்டில் வேலை செய்யும் கணக்குப்பிள்ளையின் மகள்தான் சரோஜாதேவி. தனது தோட்டத்தில் வேலை செய்பவரின் மகள் என்பது தெரிவதற்கு முன்பே காதலிக்க தொடங்கியுள்ளார் சிவாஜி கணேசன்.

ராஜேந்திரன் சரோஜாதேவி விரும்புவது சிவாஜி கணேசனுக்கு தெரிந்துவிடுகிறது. உடனே அவரை கொலை செய்ய வேண்டும் என ஒரு மலையின் உச்சரிக்கை அழைத்துச் செல்கிறார் அங்கே சிவாஜி கணேசனுக்கு உன்மை தெரிந்து விடுகிறது. அதற்குப் பிறகு நீயும் சரோஜாதேவியின் இணைந்து விடுங்கள் என்று கூறிவிட்டு சிவாஜி கணேசன் அந்த பாறையில் இருந்து குதித்து விடுகிறார். சிவாஜியால் முந்தைய காலத்தில் நன்மைகளைப் பெற்ற ஒருவர். மலை உச்சியில் இருந்து விழுந்த அவரைக் காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக சிவாஜி கணேசன் நடக்க தொடங்குகிறார். சிவாஜி இறந்து விட்டதாக அனைவரும் நம்பி வருகின்றனர். சரோஜாதேவியை ராஜேந்திரன் மணந்து கொள்ளாமல் தனது கல்லூரி காலத்தில் விரும்பிய பெண்ணான விஜயகுமாரியை திருமணம் செய்து கொள்கிறார். மனம் நொந்து போன சரோஜாதேவி தற்கொலை செய்வதற்காக மழையில் உச்சிக்கு செல்கிறார் அப்போது சிவாஜிகணேசன் வந்து தடுத்து விடுகிறார். இருவரும் சேர்ந்து விடுகின்றனர், இதுதான் இப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்தை கே.சேகர் இயற்றினார். நடிகர் பி.எஸ்.வீரப்பா இந்த திரைப்படத்தை தயாரித்தார். இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் எதார்த்தமாக நடித்திருப்பார்கள். சிவாஜி கணேசனை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கதாபாத்திரத்தை நகல் எடுத்தது போல் நடித்திருப்பார். திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றனர் இன்று வரை பலரது பிளே லிஸ்டில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் இருந்து வருகின்றது என கூறினால் அது மிகையாகாது. கண்ணதாசன் வார்த்தைகளால் விளையாடியிருப்பார்.

அப்படி இப்படத்தில் இடம்பெற்ற சட்டி சுட்டதடா கை விட்டதடா பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

”சட்டி சுட்டதடா கை விட்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா

மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா

ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா

ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா

அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா

ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா

ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா

தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா

தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா

மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா”

இந்த திரைப்படத்திற்கு கண்ணதாசன் தான் அனைத்து பாடல்களையும் எழுதி உள்ளார். ஆனால் ஒரு பாடல் மட்டும் எழுதாமல் அதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். அனைத்து பாடல்களையும் விரைவாக எழுதி முடித்த கண்ணதாசன் இந்த பாடலை எழுதாமல் நீண்ட நேரம் நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டதால் கண்ணதாசனை நேரில் சந்தித்த இப்படத்தின் இயக்குனர் சங்கர் என்ன கவிஞரே மற்ற பாடல்களை மாதிரி சட்டி சுட்டதடா கை விட்டதடா அப்படின்ற மாதிரி பாடலை சீக்கிரம் எழுதிக் கொடுத்தீர்கள். அதே மாதிரி இப்பாடலையும் எழுதி கொடுக்க வேண்டியது தானே. இதில் ஏன் தாமதம் எனக் கேட்டுள்ளார்.

அவர் சொன்னதை நன்கு கவனித்த கண்ணதாசன் இயக்குனர் சொன்னதையே பாடல் வரியாக மாற்றி விட்டார் இந்த பாடல் இப்படி தான் உருவானது .இன்றும் இப்பாடல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது இப்பாடல் மிகுந்த வரவேற்பையும் பெற்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel
பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.