14 years of Paiya : பயணத்தை அற்புதமாக காட்டிய படம்.. பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.. 14 ஆம் ஆண்டில் பையா!
14 years of paiya : எதிர்பாராத ஆச்சர்யங்களையும் புது புது அனுபவங்களை கொடுக்கும் பயணத்தை நேசிக்கும் நபர்கள் ஏராளம். இப்படி ஒரு பயணத்தை மையமாக கொண்டு வெளிவந்த படம் தான் பையா.

2010ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பையா. மேலும் இப்படத்தில் மிலிந்த் சோமன், சோனியா தீப்தி மற்றும் ஜெகன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெற்றிக்கு இசையும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து அனைத்து பாடல்களையும் ஹிட் செய்து இருப்பார்.
இதுவரை நடித்திராத கெட்டப், ஸ்டைலிஷ் கேரக்டர் என புது விதமாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார் கார்த்திக்.இப்படத்தில் இருந்து பையா கார்த்தி என அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு இப்படம் அவருக்கு பெயர் பெற்று கொடுத்தது.
பயணம் அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம். யாருக்குத்தான் பயணம் என்றால் பிடிக்காது. அதுவும் நமக்கு பிடித்த நபருடன் பயணம் அமையும் போது சொல்ல வார்த்தை இல்லை. அந்த அளவிற்கு வாழ்வில் மறக்க முடியாத பயணமாக அமைந்துவிடும். எதிர்பாராத ஆச்சர்யங்களையும் புது புது அனுபவங்களை கொடுக்கும் பயணத்தை நேசிக்கும் நபர்கள் ஏராளம். இப்படி ஒரு பயணத்தை மையமாக கொண்டு வெளிவந்த படம் தான் பையா.