‘ஜோதிகா தங்கச்சி மாதிரி.. என் இடுப்பை நினைத்து பெருமை.. அஜித் கூட எஸ்.ஜே.சூர்யா சொன்னபடி நடித்தேன்’: சிம்ரன் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘ஜோதிகா தங்கச்சி மாதிரி.. என் இடுப்பை நினைத்து பெருமை.. அஜித் கூட எஸ்.ஜே.சூர்யா சொன்னபடி நடித்தேன்’: சிம்ரன் பேட்டி

‘ஜோதிகா தங்கச்சி மாதிரி.. என் இடுப்பை நினைத்து பெருமை.. அஜித் கூட எஸ்.ஜே.சூர்யா சொன்னபடி நடித்தேன்’: சிம்ரன் பேட்டி

Marimuthu M HT Tamil Published Feb 21, 2025 10:05 AM IST
Marimuthu M HT Tamil
Published Feb 21, 2025 10:05 AM IST

சிம்ரன் பேட்டி: நடிகை சிம்ரன் அஜித்துடன் நடித்தது பற்றியும், ஜோதிகாவுடான பந்தம் பற்றியும், தன் உடல்வாகு குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

 ‘ஜோதிகா தங்கச்சி மாதிரி.. என் இடுப்பை நினைத்து பெருமை.. அஜித் கூட எஸ்.ஜே.சூர்யா சொன்னபடி நடித்தேன்’: சிம்ரன் பேட்டி
‘ஜோதிகா தங்கச்சி மாதிரி.. என் இடுப்பை நினைத்து பெருமை.. அஜித் கூட எஸ்.ஜே.சூர்யா சொன்னபடி நடித்தேன்’: சிம்ரன் பேட்டி

இதுதொடர்பாக நடிகை சிம்ரன் அளித்த பேட்டியில், ஜோதிகாவுடனான நட்பு பற்றியும், அஜித்துடன் நடித்தது பற்றியும், சில முக்கிய கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தார். 

’அஜித்தோடு வாலியில் நடிக்கும்போது நல்ல அஜித் கூட நடிக்கிறோமோ, இல்ல கெட்ட அஜித் கூட நடிக்கிறோமோ என்கிற சஸ்பென்ஸ் இருக்குமே?. அதை மனதில் கொண்டுவந்தீங்க?.

வாலியில் நடித்தது நன்றாக இருந்தது. எனக்கும் அஜித்துக்கும் எஸ்.ஜே.சூர்யா கதையைச் சொல்லிக்கொடுப்பார். அஜித் நடிக்கும்போது நான் எப்படி நடிக்கணும்னு எஸ்.ஜே. சூர்யா சொல்லிக்கொடுப்பார். அது நான்கிடையாது. அது எஸ்.ஜே.சூர்யா சொல்லிக்கொடுத்ததை நடித்தது தான்.

பஞ்ச தந்திரம் கேரக்டரில் நான் நடிச்சது முழுக்க முழுக்க கே.எஸ்.ரவிக்குமார் சொல்லிக்கொடுத்தது தான். பம்மல்.கே.சம்மந்தம் முழுக்க மெளலி சார். இயக்குநர் உடைய நடிகை தான் நான். அவங்க என்ன சொல்றாங்களோ, அதை மேம்படுத்தி நடிக்கணும்.

ஸ்கிரிப்ட் கேட்கும்போது மனதில் ஓடுமா?

கதை கேட்கும்போது கண் முன்னாடி ஓடணும். முதல் தடவை நடிக்கும்போது அதை ஃபீல் செய்யணும். அந்த ஃபீல் இல்லை என்றால், கதையைப் புதுப்பிக்கணும்.

இப்போது வரும் புதுமுக நடிகர்கள் ரிகர்சல் எல்லாம் பண்றாங்களா? வாய்ப்புகள் எளிதாக கிடைக்குதுன்னு நினைக்கிறீங்களா?

முன்பு சினிமாவுக்குள் நடிக்க நடிகையாக வருவதே கஷ்டம். ஆனால், ஈஸியாக வெளியில் போய்விடலாம்.

முன்பெல்லாம் நிறைய படங்கள் எடுக்கமாட்டார்கள். இப்போது நிறைய எடுக்கிறாங்க. நீங்கள் உள்ளே வந்திருவீங்க. ஆனால், உங்களைத் தக்கவைக்கிறது உங்கள் கையில் தான் இருக்கு. போட்டிகள் அதிகமாகிடுச்சு.

சினிமாவில் போட்டிகள் நிறைய இருக்குன்னு சொல்றீங்களே? இப்போது நீங்கள் சினிமாவுக்கு வந்திருந்தால் வரவேற்பு ஈஸியாக இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா, இல்லை கஷ்டமாக இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா?

சினிமாவில் நடிக்கணும்னு நீங்கள் வந்திருந்தால் நெருப்பு மாதிரி ஆர்வமாக இருக்கணும். சும்மா வந்திட்டு இருக்கக்கூடாது. சினிமாவில் நிலைத்து நிற்கணும் என்கிற எண்ணத்தோடு வந்தால் நூறு சதவீதம் நின்றுவிடலாம். நான் இப்போது வந்தாலும் நல்ல நடிகையாக நின்று இருப்பேன். ஏனென்றால், நான் அந்த மனநிலையில்தான் இருக்கேன்.

அதற்காக என்ன கத்துக்கிட்டீங்க?

டான்ஸில் உங்களை நீங்கள் டெவலப் செய்துக்கணும். காமெடி ரோலில் நடிக்கத்தெரிஞ்சுக்கணும். இப்படி நிறைய விஷயங்கள்.

வீட்டில் கஷ்டமான சூழல்கள் நடந்திருக்கும். நடிக்கவந்தவுடன் அந்த மனநிலையை மாற்றி எப்படி நடிக்குறீங்க?

பாருங்க. நான் கேமராவை ஆன் செய்ததும் நான் வேறு ஒரு ஆள். என் ஸ்ட்ரெஸ் எல்லாம் ரிலீஸ் ஆகி வேறு ஒரு ஆளாக மாறிடுவேன். நான் ஸ்ட்ரெஸ் ஆக இருக்கும்போது மூவி பார்ப்பேன். எனக்கு என்னுடைய பணிதான் ஸ்ட்ரெஸ் ரிலீஃவ்.

பள்ளி நாட்களிலும் இப்படி தானா?

பள்ளி நாட்களிலும் நான் இப்படி தான். நான் ஸ்கூல் படிக்கும்போது டிரெயிங் மாஸ்டர் தூங்கும்போது அவங்க முடியைக் கட் செய்திருக்கிறேன். நான் நிறைய தடவை காப்பி அடிச்சிருக்கேன். என்னைக்காப்பாத்த எங்க அப்பா எல்லாம் ஸ்கூலுக்கு வந்திருக்கார்.

நீங்களும் ஜோதிகாவும் 12பியில் சேர்ந்து நடிச்சிருந்தீங்க. அப்போது உங்கள் இரண்டுபேருக்கும் இடையில் பந்தம் எப்படி இருந்தது?

ஒரு ஆரோக்கியமான போட்டியோடு தான் இருவரும் நடித்தோம். பூனை - எலி மாதிரி கிடையாது. ஜோதிகா எனக்கு தங்கச்சி மாதிரி. இதுதான் உண்மை. நாங்கள் நல்ல தோழிகளும் கூட. அவங்களுடைய பணி வேறு. என்னுடைய பணி என்பது வேறு. அந்த பப்ளி, ஜாலி கேரக்டர் ஜோதிகாவால் தான் பண்ணமுடியும். நான் அதைவிட ரொம்ப கனமான கதாபாத்திரமாக தான் நடித்து இருந்தேன்.

மீனா என்றால் கண் அழகுன்னு சொல்றாங்க. அப்படி, சிம்ரன் என்றால் இடுப்பு என்று தான் சொல்றாங்க. அது உங்களை சங்கடப்படுத்துகிறதா?

சங்கடம் எல்லாம் செய்யல. சினிமாவில் மக்களை சந்தோஷப்படுத்தணும். எனக்கு நல்ல இடுப்பு இருக்கு. என் இடுப்பை நினைத்து பெருமைப்படத்தான் செய்கிறேன். ஃபிட்டாக இருப்பதை நினைத்து பெருமைப்படத்தான் செய்கிறேன். இடையில் பூசணிக்காய் மாதிரி வெயிட் போட்டுட்டேன்.

திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தில் நீங்கள் நடித்தது எப்படி?

இதை நான் சொல்லித்தான் ஆகணும். உங்கள் ரோல், கதை எல்லாம் சொல்லும்போது நல்லாயிருக்கு. ஆனால், முழுக்கதையும் சொல்லல. என்னை இப்படி டபுள் மீனிங் வசனம் வைச்சிருக்கிறேன் என்று சொல்லி படத்தில் நடிக்க என்னை கன்வின்ஸ் செய்யமுடியும் நினைக்கிறீர்களா?. அதில் பெண்களை இழிவுசெய்ற நிறைய சீன்கள் இருந்தது. எனக்கு அந்தப் படம் எப்படி எடுக்கப்போறாங்கன்னு தெரியாது’ என பேசியிருக்கிறார், நடிகை சிம்ரன்.

நன்றி: சிம்ரன், பாஸ்கி டிவி, ஏ யூட்யூப் சேனல்