தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Important Information Released About Rajinikanth's Salary For Lal Salaam

Lal Salaam: ‘நிமிஷத்துக்கு ரூ.1 கோடி..’: லால் சலாமுக்காக மகளிடமே சம்பள விஷயத்தில் கறார்காட்டிய ரஜினி

Marimuthu M HT Tamil
Feb 08, 2024 03:00 PM IST

’லால் சலாம்’ படத்துக்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

லால் சலாம்
லால் சலாம்

ட்ரெண்டிங் செய்திகள்

லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினி சிறப்புத்தோற்றத்தில் நடித்த படம், லால் சலாம். இப்படம் நாளை (பிப்ரவரி 9ஆம் தேதி) வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்த ஒரு புதிய போஸ்டரையும் வீடியோவையும் படத்தயாரிப்புக்குழு பகிர்ந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து வருகிறார். முன்னதாக இவர் தனது மாஜி கணவர் தனுஷை வைத்து’ 3’, கவுதம் கார்த்திக்கை வைத்து ’வை ராஜா வை’ ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். தவிர, ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ’உன் மேல ஆசைதான்’ ஆகியப் பாடலையும், அப்படத்தில் ரீமாசென்னுக்கு டப்பிங் வாய்ஸும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் ஏதாவது சாதித்துவிட வேண்டும் என நினைக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது திருமணப் பந்தத்தில் இருந்து முறிந்து வெளியே வந்தபின், ’பயணி’ என்னும் மியூசிக்கல் வீடியோவை இயக்கினார். பின், கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ’லால் சலாம்’ என்னும் ஒரு படத்தை இயக்கினார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்குண்டான படப்பிடிப்பு திருவண்ணாமலை, சென்னை, மும்பை ஆகியப் பல இடங்களில் நடைபெற்று முடிந்தன. 

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். இந்தப் படத்துக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்று இருக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள 'லால் சலாம்' திரைப்படம் நாளை(பிப்ரவரி 9ஆம் தேதி) ரிலீஸாகிறது.

அதற்காக சமீபத்தில் சென்னை சாய் ராம் கல்லூரியில் ‘’லால் சலாம்'' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. ரஜினிகாந்த், விஜய் குறித்து பேசியது வைரலானது. அதேபோல், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன் தந்தை சங்கி கிடையாது எனக் கூறியதும் சர்ச்சையானது. அது ஒருவகையில் படத்திற்கு புரோமோஷனாகவும் அமைந்தது.

இந்நிலையில் படத்திற்காக புரோமோஷன் பணிகளில், தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தீவிரமாய் ஈடுபட்டது. அதன்படி, ‘லால் சலாம்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும், வீடியோ ஒன்றையும்கூட எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது. 

இந்நிலையில் படத்தின் கதை குறித்து, ஆடியோ லாஞ்சில் பேசிய ரஜினிகாந்த் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது தனது தந்தையிடம் ஐஸ்வர்யா, ‘நேஷனல் அவார்டு வாங்கிற மாதிரி கதை இருக்கிறது. நடிக்கிறீங்களா?’ என லால் சலாம் படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார். அதற்குப் பதில் சொன்ன ரஜினி, ‘அவார்டு படம் எல்லாம் வேண்டாம். நன்றாகப் பணம் சம்பாதிக்கிற மாதிரி இருந்தால் சொல்லுப்பா எனச் சொல்லிவிட்டு’ நகர்ந்திருக்கிறார். பின் ஒருவழியாக கதையைக் கேட்டுவிட்டு,ஓ.கே.சொல்லி நடித்திருக்கிறார். 

இந்நிலையில் ‘’லால் சலாம்'' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘’மொய்தீன் பாய்'' என்ற சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தனது காட்சி இடம்பெறும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறார், நடிகர் ரஜினிகாந்த்.  அதாவது லால் சலாம் படத்தில் 45 நிமிடங்கள் தோன்றும் நடிகர் ரஜினிகாந்த், சுமார் 45 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. 

ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் படத்தில் நடிக்கும்போது,  சம்பளத்தில் காம்ப்ரமைஸ் ஆகாமல் நடித்துள்ளார், நடிகர் ரஜினிகாந்த். மேலும் சொன்னபடியே கறார்காட்டி வாங்கியுள்ளார், நடிகர் ரஜினிகாந்த். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.