ilayaraja: ‘கம்ப்யூட்டர யார் தட்டுனாலும் சத்தம் வரும்.. அத நான் இசைன்னு நம்பணுமா?.. திறமையை வளருங்கடா’ - இளையராஜா பேட்டி
Ilayaraja: ‘அவர்கள முன்னோக்கி சென்று கொண்டிருப்பது போல தெரியவில்லை; பின்னோக்கி செல்வது போல தெரிகிறது இன்னும் சொல்ல வேண்டுமானால், அதுல பாதாளத்தை நோக்கி செல்வது போல தெரிகிறது’ - இளையராஜா பேட்டி

ilayaraja: பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மேற்கத்திய இசைக்கலைஞர்களுடனும் வேலை பார்த்திருக்கிறார். மேற்கத்திய இசைக்கலைஞர்களுடனும் வேலை பார்த்திருக்கிறார். சில இசை கோப்புகளுக்கு அவர் அயல் நாட்டிற்குச் சென்று, அங்குள்ள குழுவோடு பணியாற்றி இருக்கிறார். அதற்கான காரணம் என்ன? இரண்டிற்குமான வித்தியாசம் என்ன உள்ளிட்டவை குறித்து அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்கள் இங்கே!
முதலில் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்
இது குறித்து சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘உண்மையில் நம்மூர் ஆட்களையும் அங்குள்ள ஆட்களையும் பிரித்துப் பார்த்ததன் விளைவுதான், நான் அயல் நாட்டிற்கு சென்று வேலை பார்த்தது. நான் அந்த இசைக்கோப்புகளை நம்மூர் ஆட்களை வைத்து எடுக்க வில்லை.
காரணம், அயல் நாட்டின் தரம் இங்கே இருந்தது என்றால், நான் ஏன் அங்கே சென்று இசையை பதிவு செய்யப்போகிறேன். நீங்கள் முதலில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் கம்ப்யூட்டர் மூலமாக இசையை கொண்டு வருகிறீர்கள்.
அவருக்கு தெரியாது
டூயட் பாட்டை எடுத்தீர்கள் என்றால், ஹீரோ பாடும் பொழுது, ஹீரோயின் இருக்க மாட்டாள்; ஹீரோயின் பாடும்போது ஹீரோ இருக்க மாட்டார். ஹீரோ அவன் கேட்கக்கூடிய கேள்வியை மைக்கை பார்த்து கேட்டுக் கொண்டிருப்பான். அவள் சொல்லக்கூடிய பதிலை சுவறை பார்த்து சொல்லிக் கொண்டிருப்பாள். அது கனெக்சனே இல்லாமல் இருக்கிறது. இப்போது வாத்திய கலைஞர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள். ஏனென்றால் இப்போது எல்லோரும் கீபோர்டும், லேப்டாப்முமாய் உட்க்காந்திருக்கிறார்கள்.
யாருக்குமே தெரியாது
இவர் என்ன புரோகிராம் செய்கிறார் என்று அவர்களுக்கு தெரியாது. அவர்கள் என்ன புரோகிராம் செய்கிறார் என்று இவர்களுக்கு தெரியாது. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று மியூசிக் டைரக்டருக்கு தெரியாது; மியூசிக் டைரக்டர் என்ன செய்கிறார் என்பது டைரக்டருக்கு தெரியாது.
அவர்கள் முன்னோக்கி சென்று கொண்டிருப்பது போல தெரியவில்லை; பின்னோக்கி செல்வது போல தெரிகிறது இன்னும் சொல்ல வேண்டுமானால், அதள பாதாளத்தை நோக்கி செல்வது போல தெரிகிறது’ என்று பேசினார்.
தான் திமிர் பிடித்தவன் என்று வைக்கப்படும் விமர்சனத்திற்கு அவர் கொடுத்த பதிலும் அந்தப்பேட்டியில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
வேறு யாருக்கு திமிர் வரும்.
எனக்கு திமிர் வராமல் வேறு யாருக்கு திமிர் வரும். எனக்குத்தான் கர்வம் என்பது வரவேண்டும். எனக்கு தான் திமிர் அதிகமாக வர வேண்டும். காரணம் உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்து கொண்டிருக்கிறேன்.. உலகத்தில் யாரும் செய்ய முடியாததை நான் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு திமிர் இல்லாமல் எப்படி இருக்கும். இதையெல்லாம் நினைக்கும் பொழுது எனக்கு திமிர் வருமா வராதா? ஆனால் எனக்குத் திமிர் இல்லை.
உனக்கு எவ்வளவு திமிர்?
ஆனால், எனக்குத் திமிர் இருக்கிறது என்று ஒருவன் சொல்கிறான். அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று பாருங்கள். நான் என்னுடைய வேலையை ஒழுங்காக செய்துவ சென்று கொண்டிருக்கிறேன். கர்வம் என்பது எப்போது வரும்; ஒரு வேலையை நன்றாக செய்தால் கர்வம் வரும். என்னை குற்றம் சாட்டுபவர்கள் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, என்னை கர்வம் பிடித்தவர் என்று சொன்னால், நிச்சயம் எனக்கு கர்வம் இருக்கத்தான் செய்யும். விஷயம் இருக்கிறவனிடம் கர்வம் இருக்காதா? என்ன சொல்லுங்கள்’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்