Ilayaraja: ‘எனக்கு பிஜிஎம் போட தெரியாதுன்னு சொன்னார்.. அன்னைக்கு முடிவெடுத்தேன்’ -இளையராஜா பேட்டி
Ilayaraja: ‘அவனால் பின்னணி இசையை அமைக்க முடியாது என்று கூறிவிட்டார். உடனே நாம் தான் உதவியாளராக இருந்து இவற்றையெல்லாம் செய்கிறோம்.’ - இளையராஜா பேட்டி

Ilayaraja: பிரபல இசையமைப்பாளரான இளையராஜா தான் ஏன் இசையில் உதவியாளரை வைத்துக்கொள்வதில்லை என்பது குறித்து அண்மையில் சன் நியூஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார். மேலும் அதில், சிம்பொனி இசைக்குறித்தும், அதை தான் பயன்படுத்திய விதம் குறித்தும் பேசி இருக்கிறார்.
ஹார்மனி சிஸ்டம் இருக்கிறது.
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, ‘ஆரம்பத்திலிருந்து நான் கேட்ட கிளாசிக்கல் உள்ளிட்ட மியூசிக்கை வைத்துக்கொண்டுதான் நான் சினிமாவில் ஹார்மோனி இசை சிஸ்டத்தை நான் கொண்டு வந்தேன். எம் எஸ் வி அண்ணனுடைய இசையிலும் இந்த ஹார்மனி சிஸ்டம் இருக்கிறது. ஆனால் அவையெல்லாம் ஹார்மனி இசைதான் வேண்டும் என்ற ரீதியில் பெறப்பட்டவை கிடையாது. அது போகிற போக்கில் அப்படியே நடந்து சென்றிருக்கிறது.
எப்படி வேலை செய்கிறது?
கிட்டார் வாசிப்பவரை டியூனுக்கு ஏற்றப்படி கிட்டாரை வாசிக்கச் சொன்னால், அவரே தீர்மானம் செய்து இசையை வாசிப்பார். ஆனால், ஹார்மனி இசையில் நீங்கள் இசைக்குறிப்புகளை கொடுத்து, உங்களுக்கு தேவையானவற்றை வாங்க வேண்டும். அன்றைய காலத்தில் இந்த ஹார்மனி இசையை செய்து கொடுப்பதற்கு ஆள் இல்லை. அதன் பின்னர் அதற்கு உதவியாளர்கள் வந்தார்கள்.