தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ilayaraja: பாடல்கள் மீது இளையராஜா உரிமை கோர முடியாது.. எக்கோ நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்

Ilayaraja: பாடல்கள் மீது இளையராஜா உரிமை கோர முடியாது.. எக்கோ நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்

Aarthi Balaji HT Tamil
Jun 13, 2024 07:47 PM IST

பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என எக்கோ நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாடல்கள் மீது இளையராஜா உரிமை கோர முடியாது.. எக்கோ நிறுவனம்
பாடல்கள் மீது இளையராஜா உரிமை கோர முடியாது.. எக்கோ நிறுவனம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து இருந்தன.

ஆனால் ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி, இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.