பிரியப்பட்ட நாட்டுக்காரே.. சிம்பொனி நிறைவு செய்ததை மலையாளத்தில் பேசி அறிவித்த இளையராஜா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிரியப்பட்ட நாட்டுக்காரே.. சிம்பொனி நிறைவு செய்ததை மலையாளத்தில் பேசி அறிவித்த இளையராஜா

பிரியப்பட்ட நாட்டுக்காரே.. சிம்பொனி நிறைவு செய்ததை மலையாளத்தில் பேசி அறிவித்த இளையராஜா

Marimuthu M HT Tamil
Dec 13, 2024 11:00 AM IST

பிரியப்பட்ட நாட்டுக்காரே.. சிம்பொனி நிறைவு செய்ததை மலையாளத்தில் பேசி அறிவித்த இளையராஜாவின் செய்தியைப் பற்றிப் பார்க்கலாம்.

பிரியப்பட்ட நாட்டுக்காரே.. சிம்பொனி நிறைவு செய்ததை மலையாளத்தில் பேசி அறிவித்த இளையராஜா
பிரியப்பட்ட நாட்டுக்காரே.. சிம்பொனி நிறைவு செய்ததை மலையாளத்தில் பேசி அறிவித்த இளையராஜா

தமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளர், இளையராஜா. அன்றைய பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் (தற்போது தேனி மாவட்டம்) உள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். 'அன்னக்கிளி' என்னும் தமிழ்ப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப்பல்வேறு மொழிகளில் இசையமைத்து ஹிட்டடித்தவர். இவரது 1000-ஆவது படமாக, இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த ’தாரை தப்பட்டை’ இருந்தது.

இந்தாண்டின் தொடக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக, ஜன.25 மாலை 5.20 மணிக்கு இலங்கையில் காலமானார். இரைப்பை புற்றுநோய் காரணமாக ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த அவர் சிகிச்சைப் பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தியிருந்தார்.

அதன்பின் அவரது உடல், இளையராஜாவின் அன்னை சின்னத்தாய், அவரது மனைவி ஜீவா ஆகியோரது நினைவிடம், அமைந்துள்ள ‘லோயர்கேம்ப் பங்களா’ எனப்படும் தோட்டத்தில் அடக்கம்செய்யப்பட்டது.

தனிமையில் வருந்திய இளையராஜா:

முன்பே மனைவியின் இறப்பில் தனிமையில் வருந்தி வந்த இசைஞானி இளையராஜா, தன் ஆசை மகளின் மரணத்தாலும் நிலைகுலைந்து போனார் என்றே அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

இதனால் அவரது தாய், மனைவி மற்றும் மகளின் நினைவிடத்துக்குப் போய், இளையராஜா அவ்வப்போது சென்று தியானம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

பெரும்பான்மையாக சினிமா நிகழ்ச்சிகள் எதிலும் தலைகாட்டாத இளையராஜா, தன் கதையை வைத்து எடுக்கும் பயோபிக்கிற்கான முன் புரோமோசன் நிகழ்ச்சியில் மட்டும் மரியாதை நிமித்தமாக கலந்துகொண்டார். இந்தப் படத்தில் தனுஷ் இளையராஜாவின் தோற்றத்தில் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் என்பது உறுதியானது. 

அதைத்தொடர்ந்து விடுதலை 2 திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இளையராஜா கலந்துகொண்டார்.

இளையராஜாவின் பேச்சு:

இந்நிலையில் தான், இசைஞானி இளையராஜா மலையாளத்தில் பேசி ஒரு காணொலியை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘’அன்புக்குரிய கேரள மக்களே, சொந்தங்களே.. வணக்கம். இந்தச் செய்தி என்னுடைய அண்ணன் ஜே.சி. அண்ணனுக்கானது மட்டும் தான். ஜே.சி. அண்ணனுக்குக் கொச்சியில் வைச்சு, பாராட்டு விழா நடந்தபோது, அண்ணன் என்னிடம் தன்னுடைய ஆசையை சொன்னார்.

அது என்னவென்றால், அவர் ராஜா வந்து சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவோடு ஒரு சிம்பொனி செய்து ரிலீஸ் செய்யணும் என்று ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

இங்கு தமிழ்நாட்டில் நான் நிறைய படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். சிம்பொனி அமைச்சிருக்கேன். இந்நிலையில் என்ன நினைப்பில் ஜே.சி. அண்ணன் சொன்னரா, அந்த வேலை முடிந்தது. குறிப்பாக, சிம்பொனிக்காக முழுமையாக எழுதி, சிம்பொனியை முழுமையாக ரெக்கார்டு செய்து வைச்சிருக்கேன். அதனை ஜே.சி.அண்ணனுக்கு பெரிய சந்தோஷத்தோடு தெரிவிக்கிறேன். அதனால் இதனை சொல்கிறேன். அண்ணா நமஸ்காரம். அண்ணா நீங்கள் சொன்ன வேலை, கடவுளின் அனுகிரகத்தோடு சரியாக வந்துள்ளது. ரொம்ப சந்தோஷம். அண்ணன் செய்ததை நான் நிறைவேற்றிட்டேன்’’ என இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

இதைப் பார்த்த ராகுல் என்ற ஒரு நெட்டிசன் ராஜா சாருக்கு மலையாளம், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரியும் என்று பதிவேற்றியிருக்கிறார். அதனைத்தொடர்ந்து விஜய் ஏகாம்பரம் என்ற நெட்டிசன் பதிவிட்ட கமெண்டில், ‘’ உன் தேகமெல்லாம் ராகம், உள் நாளமெல்லாம் தாளம், நீ இசைஞானி இல்லை.. இசைமேனி’’ எனக்குறிப்பிட்டிருக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.