தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ilaiyaraja Symphony: 35 நாள்களில் சிம்பொனி இசை..! விடியோ மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த இளையராஜா

Ilaiyaraja Symphony: 35 நாள்களில் சிம்பொனி இசை..! விடியோ மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த இளையராஜா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 16, 2024 07:45 PM IST

சினிமா இசை வேறு, பின்னணி இசை வேறு. இவை எல்லாம் பிரதிபலித்தால் அது சிம்பொனி இசை கிடையாது. ப்யூர் சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன் என்று விடியோ மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த இளையராஜா,தன்னை பற்றி உலா வரும் விஷயங்கள் குறித்தும் பதில் தெரிவித்துள்ளார்.

விடியோ மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த இளையராஜா
விடியோ மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த இளையராஜா

ட்ரெண்டிங் செய்திகள்

"என்னைப் பற்றி எதோ ஒரு வகையில் விடியோக்கள் வருவதாக வேண்டியவர்கள் சொல்வார்கள். நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை.

என்னுடைய வேலையை கவனிப்பது மட்டுமே என் வேலை. நான் என் வழியில் ரொம்ப சுத்தமா போயிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்தி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த ஒரு மாத காலத்தில் சிம்பொனியே எழுதி முடித்துவிட்டேன்.

சினிமா படங்களுக்கு இசையமைப்பது, இடையில் விழாக்களுக்கு சென்று தலைகாட்டுவது என இருந்தாலும் ஒரு சிம்பொனியை 35 நாள்களில், முழுவதுமாக நான்கு மூவ்மெண்ட்கள் உள்ள சிம்பொனியை எழுதி விட்டேன் என்கிற செய்தியை சொல்லி கொள்கிறேன். ஏனென்றால் இது எனக்கு சந்தோஷமான செய்தி.

சினிமா இசை வேறு, பின்னணி இசை வேறு. இவை எல்லாம் பிரதிபலித்தால் அது சிம்பொனி இசை கிடையாது. ப்யூர் சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன் என்கிற உற்சாக செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இளையராஜா பயோபிக்

சினிமா நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் தலைகாட்டாத இசையமைப்பாளர் இளையராஜா, தனது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகும் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தமாக கலந்துகொண்டார்.

இந்தப் படத்தில் தனுஷ் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக இந்த படம் இசையமைப்பாளர் இல்லாமல் உருவாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்கள், பின்னணி இசையை காட்சிகளுக்கு பயன்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா சட்டப்போராட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’கூலி’ படத்தின் அறிமுக விடியோவில், 1983ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ’’தங்க மகன்’’ படத்தில் இடம்பிடித்த ’’வா வா பக்கம் வா’’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் தனது அனுமதியின்றி டீஸர் விடியோவுக்கு பாடலை பயன்படுத்தியதாக கூறி, இளையராஜா பதிப்புரிமை நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த விவகாரத்தில், "பிரச்னை இளையராஜாவுக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கும் இடையிலானது" என்று ரஜினிகாந்த் கூறினார்.

70களின் பிற்பகுதியிலும் 80களின் முற்பகுதியிலும் அவர் இயற்றிய பாடல்கள் தொடர்பாக இந்திய பதிவு உற்பத்தி நிறுவனத்துடன் (இனெர்கோ) இளையராஜா வழக்குத்தொடுத்தார். இதையடுத்து பாடல் வரிகளை வேறு யாரோ எழுதியதால் இளையராஜா உரிமை கோர முடியுமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் தவிர, ஒரு பாடகரும் ஒரு பாடலை உருவாக்குவதில் பங்களிப்பு செய்கிறார் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

பாடலாசிரியர்களும் உரிமை கேட்டால் என்ன நடக்கும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இசையமைப்பாளர் மட்டும் பாடல்களுக்கு ஒரே உரிமையாளராக இருக்க முடியாது என்று கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விவகாரம் கோலிவிட்டில் ஹாட் டாப்பிக்காக இருந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் இளையாராஜாவுக்கு ஆதரவாகவும், அவரை விமர்சித்தும் பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சிம்பொனி உருவாக்கிய மகிழ்ச்சிகரமான செய்தியை பகிர்ந்திருக்கும் இளையராஜா, மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை என விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்