தமிழ் சினிமா ரீவைண்ட்: இசைஞானி இளையராஜா அறிமுக படம் மற்றும்.. மே 14 தமிழில் முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
மே 14ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் முன்னணி ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நாளில்தான் உலக தமிழர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமான படம் வெளியாகியுள்ளது.

மே 14, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் கரண் நடித்த கருப்பசாமி குத்தகைதாரர், சிவக்குமார் நடித்த கிளாசிக் படமான அன்னக்கிளி, மோகமுள் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
கருப்பசாமி குத்தகைதாரர்
கோவிந்த மூர்த்தி இயக்கத்தில் கரண், பிங்கி சர்க்கார் (மீனாட்சி), வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க மசாலா படமாக உருவாகி 2007இல் ரிலீசான படம் கருப்பசாமி குத்தகைதாரர். அம்மா செண்டிமென்ட் பின்னணியில் உருவாகியிருந்த படத்தின் கதையும், படித்துரை பாண்டி என்ற கேரக்டரில் வடிவேலுவின் காமெடியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம் நல்ல வசூலையும் பெற்று சராசரி ஹிட் படமாக அமைந்தது. படத்தில் இடம்பிடித்திருக்கும் வடிவேலு காமெடி காட்சிகள் அனைத்தும் அடிக்கடி டிவியில் ஒளிபரப்பாகும் காமெடிக்களாக இருந்து வருகின்றன
மேலும் படிக்க: ராஜ்கிரண் - கவுண்டமணி சண்டை.. வடிவேலு வடிவம் எடுத்த கதை