Ilaiyaraaja: 'என் இசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது' இலங்கையையும் விட்டு வைக்காத இளையராஜா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ilaiyaraaja: 'என் இசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது' இலங்கையையும் விட்டு வைக்காத இளையராஜா!

Ilaiyaraaja: 'என் இசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது' இலங்கையையும் விட்டு வைக்காத இளையராஜா!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 25, 2024 08:59 AM IST

இலங்கை தமிழர்கள் என் ரசிகர்கள் இல்லாமல் யாராவது இருக்கிறார்களா? எல்லோரும் துன்ப துயரங்களைக் கடந்து வந்தவர்கள் தானே? யாரையும் பாதிக்கின்ற அந்த மனநிலையில் இருந்தாலும் கூட என்னுடைய இசை உங்களை ஆறுதல் படுத்துகிறது என்றால் அதுவே எனக்கு பெரிய சந்தோசம். கடவுள் கொடுத்த வரமாக நான் நினைக்கிறேன்" - இளைராஜா

இளையராஜா
இளையராஜா (yendrendrum_ilayaraja / instagram)

இலங்கையில் இன்று நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இசைஞானி இளையராஜா இலங்கையின் கொழும்புவிற்கு சென்றுள்ளார். இசைஞானி இளையராஜா நேற்று மாலை 5.15 மணியளவில் இலங்கை சென்றுள்ளார். இலங்கையின் கட்டு நாயக்க விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். 

அங்குஇளைய ராஜாவிற்கு ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா கூறியதாவது, "எப்போது வந்தாலும் நான் இசையோடு தான் வருவேன் இலங்கையில் நீங்கள் எங்கு போனாலும் எங்கு இருந்தாலும் இசை இல்லாமல் உங்களால் இருக்க முடியாது. அது என் இசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது. இலங்கை தமிழர்கள் என் ரசிகர்கள் இல்லாமல் யாராவது இருக்கிறார்களா? எல்லோரும் துன்ப துயரங்களைக் கடந்து வந்தவர்கள் தானே? யாரையும் பாதிக்கின்ற அந்த மனநிலையில் இருந்தாலும் கூட என்னுடைய இசை உங்களை ஆறுதல் படுத்துகிறது என்றால் அதுவே எனக்கு பெரிய சந்தோசம். கடவுள் கொடுத்த வரமாக நான் நினைக்கிறேன்" என்று மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

முன்னதாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்காதது வருத்தம் என தெரிவித்திருந்தார்.  "இன்றைய நாளில் நடக்கும் நிகழ்வு சரித்திரத்தில் இடம்பெறக் கூடியது. இதுபோன்ற நிகழ்வு இதுதான் முதல்முறையாக நடக்கிறது. உலகிலேயே இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்று சொல்லலாம். வரலாற்றில் முதல்முறையாக இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது சரித்திரத்தில் என்றும் அழியாத புகழைப் பெற்றுத் தரும். இந்த காரியத்தை முடித்த நமது பிரதமர் மோடிக்கு இந்த ஆழியாகப் புகழ் சென்று சேரும். யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம். யாரால் முடியும் இது.

அனைவராலும் இது செய்ய முடியுமா என்ன. அவருக்கு எழுதி இருக்கு பாருங்க. பிரதமர் நரேந்திர மோடிக்கு என்று கடவுள் எழுதியுள்ளார். இந்தியாவுக்கு எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள். அவர்கள் என்ன செய்தார்கள். எது சரித்திரத்தில் நிற்கிறது என்று பாருங்கள்.மோடி செய்த காரியம் இருக்கிறதே சொல்லும் போதே கண்களில் நீர் வருகிறது.

இந்த நாளில் உங்கள் முன்பு இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மனநிறைவைத் தருகிறது. அதேநேரம் அயோத்தியில் இருக்க வேண்டிய நான் இப்போது இங்கே இருப்பது எனக்கு வருத்தத்தை அளித்தாலும் உங்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது.

இந்தியாவில் எத்தனையோ கோயில்கள் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் ஆண்ட மன்னன் கட்டிய கோயிலாகத்தான் அது இருக்கும். மொத்த இந்தியாவுக்குமான கோயிலாக ஒன்று உருவாகியிருக்கிறது என்றால், அது அயோத்தி ராமர் கோயில்தான். மன்னர்கள் கோயில்களைக் கட்டிய நிலையில், ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்காக கோயில் கட்டியுள்ளார் பிரதமர் மோடி. பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று அவர் தெரிவித்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.