Ilaiyaraaja: ‘நான் தலைக்கனம் பிடிச்சவனா?; யாரும் செய்ய முடியாதத பண்றேன்ல்ல.. விஷயம் இருக்கவன் கிட்ட திமிர்..’ -இளையராஜா!
Ilaiyaraaja: எனக்கு திமிர் வராமல் வேறு யாருக்கு திமிர் வரும். எனக்குத்தான் கர்வம் என்பது வரவேண்டும். எனக்கு தான் திமிர் அதிகமாக வர வேண்டும். காரணம் உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்து கொண்டிருக்கிறேன். - இளையராஜா!

Ilaiyaraaja: பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என்ற விமர்சனம் கோலிவுட் வட்டாரத்தில் முன்வைக்கப்படும் ஒன்று. அந்த விமர்சனத்திற்கு இளையராஜா சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
அதுதான் நிஜம்
இது குறித்து அவர் பேசும் போது, ‘என்னுடைய இசையின் பிரமாண்டத்தை பார்த்து, இவர் ஒரு மனிதராக இதை செய்திருக்க வாய்ப்பில்லை; நிச்சயமாக இவருக்குள் அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று உணருகிறீர்கள். அப்படி என்றால், அதுதான் நிஜம். அது என்னுடைய முயற்சியில் வருவதல்ல.
நான் இந்த ட்யூனில் உங்களை கட்டிப்போட வேண்டும் என்று நினைத்து, அந்த டியூனை நான் கம்போஸ் செய்யவில்லை. ஹார்மோனியம் பெட்டி முன்னால் உட்காருகிறேன்; மனதில் தோன்றுவதை இசையாக கொடுக்கிறேன். சிசுவில் உணர்ச்சியே இல்லாமல் இருந்த குழந்தைக்கு என்னுடைய இசை உயிர் கொடுத்திருக்கிறது.
