ஷங்கர் படத்துக்கு வந்த புது பிரச்சனை.. ட்ரெயிலர் அப்டேட் தரலைண்ணா த*கொலை தான்.. ஃபேன் பாய் சம்பவம்..
ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியிடவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி மிரட்டி உள்ளார்.
இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இந்தப் படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார். ராம் சரண் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தில் ராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தில் ராஜ் மற்றும் ஷிரிஷ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
சாதனை செய்த ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை ஷங்கர் நேரடி தெலுங்கு படமாக இயக்கியதன் மூலம் டோலிவுட் சினிமாவில் தன் முதல் காலடி தடத்தை பதித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர், அவர் படங்களில் பல சாதனைகள் செய்யப்படும் என்பது தவிர்க்க முடியாது. அதை தனது தெலுங்கு சினிமாவிலேயே செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
அதாவது, கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை இயக்குநர் ஷங்கர் அமெரிக்காவில் நடத்த திட்டமிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இது இந்திய வரலாற்றில் தெலுங்கு சினிமா செய்யும் சாதனை என்றே கூறப்படுகிறது. ஏனென்றால் இதற்கு முன் எந்த தெலுங்கு படமும் அமெகரிக்காவில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியது இல்லை.
கேம் சேஞ்சர் படம்
கடந்த 2021இல் அறிவிக்கப்பட்டு தொடங்கிய இந்த படம் பல்வேறு தாமதத்துக்கு பிறகு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவடைந்தது. அரசியல் ஆக்ஷன் திர்ல்லர் பாணியில் உருவாகியிருக்கும் படத்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார்.
படத்திலிருந்து ஏற்கனவே ஜருகண்டி, ரா மச்சா என இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒரு பாடல் வெளியாகியுள்ளது. கேம் சேஞ்சர் திரைப்படம் ஹைதராபாத், மும்பை, சண்டிகர், ஆந்திர பிரதேசம், நியூசிலாந்து உள்பட பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது.
அதிருப்தியில் ரசிகர்கள்
குளோபல் ஸ்டார் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸிர்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் நிலையில் பல நாட்களாக படத்தின் ரிலீஸ் தேதி தவிர வேறு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்ததால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் தற்போது படத்திற்கான புரொமோஷன், ப்ரி புக்கிங் எல்லாம் தொடங்க ஆரம்பிக்க உள்ளது. ஆனால், இன்னும் படத்தின் ட்ரெயிலர் குறித்து எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இதனால், படக்குழு ட்ரெயிலரை வெளியிடவில்லை என்றால் தற்கொலை செய்யப் போவதாக ரசிகர் ஒருவர் சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்துள்ளார்.
தற்கொலை மிரட்டல்
ராம் சரணின் தீவிர ரசிகரான ஈஸ்வர், கேம் சேஞ்சர் படத்தின் ட்ரெய்லர் அப்டேட் செய்யப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவுடன் ஒரு கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் 13 நாட்களே உள்ளன. நீங்கள் ட்ரெய்லர் அப்டேட் கொடுக்கவில்லை. குறைந்த பட்சம் ரசிகர்களின் உணர்வுகளைக் கூட கண்டுகொள்வதில்லை. இதனால் இந்த மாத இறுதிக்குள் ட்ரெய்லர் அப்டேட் கொடுக்காவிட்டால். புத்தாண்டு தினத்தன்று ட்ரெய்லர் வெளியாகாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்தக் கடிதத்தில் சரண் அண்ணாவின் பக்தர் ஈஸ்வர் என்றும் எழுதியிருக்கிறார்.
அத்துடன் "நான் உயிரோடு இருந்தால் எல்லோருடனும் சேர்ந்து ட்ரெயிலரைப் பார்ப்பேன். ஒருவேளை இறந்தால், என் ஆத்மா அதைப் பார்க்கும். எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது. ஜெய் சரண்" என்று கேம் சேஞ்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கையும் டேக் செய்துள்ளார்.
விமர்சிக்கும் நெட்டிசன்கள்
இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்ரெய்லர் வெளியாகவில்லை என்றால் ஏன் தற்கொலை செய்து கொள்வீர்களா என்று பலரும் கேட்கிறார்கள். மேலும், பைத்தியக்காரத்தனமான காரியங்கள் செய்து ஹீரோக்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி தற்கொலை செய்து கொள்வார் என்று சிலர் கூறுகிறார்கள். பைத்தியக்காரத் தனத்தில் மூழ்க வேண்டாம். ப்ரீ ரிலீஸ் நிகழ்வுகள், பெரிய கட்அவுட்கள் மற்றும் பெரிய நிகழ்வுகளுடன் பல விளம்பரங்கள் இருப்பதே அப்டேட் தான் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
டாபிக்ஸ்