தமிழ் செய்திகள்  /  Entertainment  /  I Will Meet You Legally Says Trisha Hit Back At The Defamer

Trisha: 'சட்டப்படி சந்திப்பேன்' - அவதூறு பரப்பியருக்கு பதிலடி கொடுத்த திரிஷா

Marimuthu M HT Tamil
Feb 20, 2024 06:00 PM IST

Trisha: தன்னைப்பற்றி அவதூறு பரப்பியரை சட்டப்படி சந்திப்பேன் என நடிகை திரிஷா எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளார்.

Trisha: 'சட்டப்படி சந்திப்பேன்' - அவதூறு பரப்பியருக்கு பதிலடி கொடுத்த திரிஷா
Trisha: 'சட்டப்படி சந்திப்பேன்' - அவதூறு பரப்பியருக்கு பதிலடி கொடுத்த திரிஷா

ட்ரெண்டிங் செய்திகள்

அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்த வெங்கடாஜலம், கூவத்தூரில் செய்த சேட்டைகள் பற்றி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ பேட்டிகொடுத்துள்ளார். அதில், ‘அதிமுகவில் ஒரு சாதாரண எம்.எல்.ஏ.வாக இருந்த வெங்கடாஜலம் கூவத்தூரில் இருக்கும்போது தன்னுடன் பொழுதைக் கழிக்க நடிகை திரிஷா வேண்டும் என்று அடம்பிடித்தார். நான் கூவத்தூரில் இருக்கும் வெங்கடாஜலத்தைப் பார்க்கப்போனேன். வெங்கடாஜலம் மது குடிக்க மாட்டார். ஆனால், அதற்குப் பதிலாக கூவத்தூரில் இருக்குபோது திரிஷாவை வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தார். இது நடிகர் கருணாஸுக்கு தெரியும். எந்ததெந்த எம்.எல்.ஏக்களுக்கு நடிகைகள் வேண்டுமோ, அவர்களுக்கு நடிகைகளிடம் பேசி

அவர்களை கூவத்தூருக்கு அழைத்து வந்தது கருணாஸ் தான். பெரும்பாலான நடிகைகள் அங்கு வந்தனர். அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது. வெங்கடாஜலத்துக்காக நடிகை திரிஷாவிடம் ரூ.25 லட்சம் கொடுத்து அவரை அழைத்து வந்தனர். நாங்கள் பார்த்ததை கேட்டதைச் சொல்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குநர் சேரன், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் நடிகை திரிஷா மீது அவதூறு பரப்பும் ஏ.வி.ராஜூவை கைது செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் மற்றும் இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பதிவில், ’வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விஷால் மற்றும் கார்த்தியை உள்ளடக்கிய நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்’ என்றார்.

இதுதொடர்பான தகவல் திரிஷாவுக்கு சென்றுள்ள நிலையில் அவர் அதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ‘’ கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. உறுதியாக தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தும் எனது வழக்கறிஞர் மூலமாகத்தான் சட்டத்தின் துணைகொண்டு சந்திப்பேன்’என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்