தமிழ் செய்திகள்  /  Entertainment  /  I Watched An Adult Film Without Knowing It Says Tamannaah Open Talk

Tamannaah:'நான் அந்த மாதிரி படத்தைப் பார்த்துட்டேன்' - தமன்னா ஓபன் டாக்!

Marimuthu M HT Tamil
Mar 07, 2024 07:09 AM IST

நடிகை தமன்னா 4 ஆண்டுகளுக்கு முன்பு, பிஹெண்ட்வுட்ஸ் ஊடகத்திற்கு அளித்த வீடியோ பேட்டி வைரல் ஆகிவருகிறது. அதில் நடிகை தமன்னா அளித்த பேட்டியைப் பார்க்கலாம்.

'நான் தெரியாமல் அந்த மாதிரி படத்தைப் பார்த்துட்டேன்' - தமன்னா ஓபன் டாக்!
'நான் தெரியாமல் அந்த மாதிரி படத்தைப் பார்த்துட்டேன்' - தமன்னா ஓபன் டாக்!

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகை தமன்னா பிஹெண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டி வைரல் ஆகியுள்ளது. அந்தப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகை தமன்னா அளித்த பதிலின் தொகுப்பு, ‘ நான் தெலுங்கில் மிஸ்டர் பெர்ஃபெக்ட் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டேன். படம் வெளியானபிறகு, அந்தப் படத்தை ஏன் தவறவிட்டேன் என்று வருந்தினேன். நானும் ஸ்ருதிஹாசனும் நல்ல தோழிகள். நாங்கள் இருவரும் இணைந்து நடித்தால் அது நல்ல ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்க வேண்டும். எனக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் எனது மொபைல்போனின் கவரில்  பின் பகுதியில் அதை எழுதி ஒட்டியிருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கே சிரிப்பு வரும் வதந்தி என்ன என்றால், நான் ஹாலிவுட் படத்தில் நடிக்கப்போகிறேன் என வரும் தகவல்களைக் கேட்கும்போது அறியாமல் சிரிப்பு வரும். 

ஒரே நேரத்தில் ஷங்கர் சாரிடம் இருந்தும் ராஜமெளலி சாரிடம் இருந்தும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் நான் நிச்சயமாக ராஜமெளலி சார் படத்தில் தான் நடிப்பேன். நான் அவரது படத்தில் முன்பே நடித்ததன்மூலம் அவரது விசுவாசி ஆகிவிட்டேன். எனக்கு அஜித், விஷால், கார்த்தி, விஜய், விக்ரம் மற்றும் சூர்யா ஆகியநடிகர்களைப் பிடிக்கும். அதேபோல் நான் இன்னொருவருடன் தொடர்பில் இருக்கிறேன். நான் இவருடன் தொடர்பில் இருக்கிறேன் என்று வரும் வதந்தி செய்திகளைக் கேட்கும்போது, எனக்கு சிரிப்பு தான் வரும். அவையெல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை. 

ஒரு தடவை பொக்கே கடைக்குச் சென்றேன். அங்கு இரண்டு பொக்கேவின் விலையை வாங்கிய பிறகு, ஆறாயிரம் ரூபாய் என்று சொன்னார்கள். அதிர்ச்சியடைந்துவிட்டேன். வேறு வழியில்லாமல் வாங்கி வந்து நண்பருக்குக் கொடுத்தேன். அதேபோல், இண்டர்ஸ்டெல்லர் என்னும் ஹாலிவுட் படம் பார்க்கப்போய் குழம்பிவந்தேன். இரண்டு தடவைப் பார்க்கப்போயும் படம் புரியவில்லை. இதெல்லாம் நான் மொக்கை வாங்கிய தருணங்கள். எப்போதும் சகநடிகருடன் நடிக்கும்போது யார் மீதும் எனக்கு கிரஷ் வந்ததில்லை. ஆனாலும் சிலர் மீது இருந்தது.  என்னுடைய போன் நம்பரை தெரியாத ஒருவரிடம் கொடுத்திருக்கிறேன். ஏதாவது அந்த நபர் தவறான மெசேஜ் செய்தால் உடனே பிளாக் செய்துவிடுவேன். எனக்கு இப்போது வரை வாகனம் ஓட்டத்தெரியாது. அதனால் என்னால் எந்த விபத்தும் நடக்காது. பள்ளிக் காலங்களில் தோழிகளின் வீட்டுக்குச் சென்றபோது சிடி பிளேயரில் நல்ல ஒரு படம் போடும்போது அந்த மாதிரி ஆபாசப் படமும் இருந்தது. அதை வேறு வழியில்லாமல் எனது தோழிகளுடன் சேர்ந்து பார்த்தோம். அதை நான் மறுக்கவில்லை. 

பாகுபலிக்கு முன்பு நடிகையாக சில வாய்ப்பில்லாமல் இருந்த தருணங்கள் இருந்தது. அப்போது பொறுமையாகத்தான் இருக்கவேண்டும். அதன்பின் நல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது மகிழ்ந்தேன். நான் யாரிடமும் இண்டர்வியூ கொடுக்கும்போது பொய்சொல்லாமல் இருந்தது இல்லை. ஏதாவது ஒன்று வந்துவிடும்’’ என்றார். 

நன்றி: பிஹெண்ட்வுட்ஸ் டிவி

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்