‘முதல் படம் வந்தப்போ ஜெயில்ல இருந்தேன்.. ஒரு லவ் பண்ணி வாழ்க்கையே போயிடுச்சி..’ -ஜோஷ்வா ஸ்ரீதர்
தன் முதல் படமான காதல் வந்த சமயத்தில் தான் சிறையில் இருந்ததால், அடுத்தடுத்த பெரிய வாய்ப்புகள் தனக்கு கிடைக்காமல் போனதாக இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் கூறுகிறார்.
இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இளையராஜாவிடம் வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் இருந்த சமயத்தில் அவருக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் உதிவியாளர்களுடனும் பழக்கம் இருந்தது. இருப்பினும் அவர்களின் மூலம் முயற்சி செய்து பார்த்தும் அவருக்கு ஏ.ஆர்.ரஹ்மானிடமும் வேலை கிடைக்கவில்லை என சினிமா விகடன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் வேலை
மேலும் அந்த பேட்டியில், நான் சர்ச்சுல மியூசிக் பண்ணிட்டு இருந்தபோது, இன்னொரு பிரண்ட் மூலமா மியூசிக் டைரக்டர் மணிசர்மாகிட்ட வாய்ப்பு கிடைச்சது. தெலுங்கு சினிமால வேலை. ஆனா சம்பளம் ரொம்ப கம்மி. வேற எதாவது வாய்ப்பு கிடைக்குமான்னு தேடிட்டு இருக்கும் போது பாலிவுட்ல இருந்து கூப்டுறாங்க. இதவிட 100 மடங்கு சம்பளம் அதிகம் கொடுத்து. நான் அங்க கிளம்பிட்டேன். அங்க ஒருஷம் வேல செஞ்சதுல காரே வாங்கிட்டேன்.
வேற பொன்னோட காதல்
அப்போ தான் ரஹ்மான் சார்கிட்ட வேலை செய்யுற வாய்ப்பும் கிடைச்சது. அவரோட ஒரு 3 வருஷம் வேலை செய்யுறேன். அப்போ என்னோட முதல் கல்யாணத்துல பிரச்சனை எல்லாம் வந்து விவாகரத்து வரைக்கும் போயிடுச்சி. அந்த சமயத்துல எனக்கு இன்னொரு பொன்னோட பழக்கமும் இருந்தது. அப்போ தான் பாலாஜி சக்திவேல் சார் போன் பண்றாரு காதல் படத்துக்கு மியூசிக் போட.
காதல் படத்திற்கு வாய்ப்பு
அப்புறம் நாங்க ஷங்கர் சார எல்லாம் பாத்து பேசி படத்துக்கு மியூசிக் போட்டுட்டு இருக்கன், அந்ந சமயத்துல தான் எனக்கு பிரச்சனையே வந்தது.நான் லவ் பண்ணிட்டு இருக்க பொன்னு வீட்ல என்ன ரவுடி மாதிரி காட்டி என் பொன்ன காப்பாத்துங்கன்னு சொல்லி கமெர்ன்மெண்ட்கிட்ட கம்ப்ளையன்ட் பண்ணிட்டாங்க.
படம் ரிலீஸ் கூட இன்னும் ஆகல. அதுக்குள்ள என்ன ரவுடி, கடத்தல்காரன், வருஷத்துக்கு ஒரு பொன்ன லவ் பண்ணுவான்னு பல கதைகள எழுதி கம்ப்ளயண்ட் கொடுத்துட்டாங்க. போலீஸ் விசாரிச்சதுல என் மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சும் வேற கேஸ் எல்லாம் போட்டு என்ன கைது பண்ணிட்டாங்க.
ஜெயில்ல போட்டுட்டாங்க
படம் ரிலீஸ் ஆகிருக்க டைம்ல என்னால எதும் பிர்சசன வர வேண்டாம்ன்னு நானும் ஜெயில்ல இருக்கேன். ஒரு மாசம் எனக்கு பெயில் தரவே இல்ல. அப்புறம் என் மேல கேஸ் நிக்கலன்னு தெரிஞ்சி, படத்துக்கு காசு வாங்கிட்டு புரொடியூசர ஏமாத்திட்டான்னு என் மேல 420 கேஸ் போடுறாங்க. இதுல என் கெரியரே போச்சு. எந்த பெரிய படமும் வரல. வாழ்க்கைய ஓட்ட சின்ன சின்ன படம் எல்லாம் பண்ணிட்டு இருந்தேன்.
மியூசிக் போடுறதையே விட்டுட்டேன்
அதுக்கு அப்புறம் எனக்கும் மியூசிக் பண்ண பிடிக்காததுனால கோவிட் டைம்ல சினிமாவுக்கு மியூசிக் பண்றதையே நிறுத்திட்டேன். வருமானம் இல்லாம எப்படி வேலை செய்யுறது.
அந்த சமயத்துல ஜோசியம் மேல ஆசை வந்து படிச்சு கத்துக்கிட்டேன். அது அவங்களுக்கு பழிச்சிடுச்சி. அப்புறம் அவங்க அவங்களுக்கு தெரிஞ்சவங்ககிட்ட சொல்ல தினமும் ஜோசியம் பாக்குறது வழக்கம் ஆகிடுச்சி. ஆனா சில உண்மைகள சொல்லி அவங்கள கஷ்டப்படுத்த விரும்பாததால 2 வருஷம் தான் அத பண்ணேன்.
இப்போ பங்கு சந்தை வர்த்தகம் தான் ஃபுல்லா. அதுல தான் என் மாச வருமானம் வந்துட்டு இருக்கு. என்னதான் நான் சினிமாவ விட்டு வந்தாலும் இன்னமும் படம் எதாவது பண்ணனும் மியூசிக் போடணும்ன்னு ஆசை வந்துகிட்டே தான் இருக்கு எனக் கூறியுள்ளார்.