'விவாகரத்தால் எனக்கும் மன அழுத்தம் இருக்கு.. அது அப்படியே கீழ தள்ளிடும்..' மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'விவாகரத்தால் எனக்கும் மன அழுத்தம் இருக்கு.. அது அப்படியே கீழ தள்ளிடும்..' மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ்

'விவாகரத்தால் எனக்கும் மன அழுத்தம் இருக்கு.. அது அப்படியே கீழ தள்ளிடும்..' மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ்

Malavica Natarajan HT Tamil
Dec 24, 2024 02:01 PM IST

விவாகரத்து சமயத்தில் எனக்கும் மன அழுத்தம் இருந்தது. அதை மட்டுமே கவனித்தால் நாம் வேலைக்கே தகுதி இல்லாதவனாக மாறிவிடுவோம் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

'விவாகரத்தால் எனக்கும் மன அழுத்தம் இருக்கு.. அது அப்படியே கீழ தள்ளிடும்..' மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ்
'விவாகரத்தால் எனக்கும் மன அழுத்தம் இருக்கு.. அது அப்படியே கீழ தள்ளிடும்..' மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் 100

இதற்கிடையில், ஜி.வி.பிரகாஷ் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது அவருக்கு 100வது திரைப்படமாக அமைந்துள்ளது. இதையடுத்து, தான் முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமான வெயில் படம் தொடங்கி, நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள் என அனைவருக்கும் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், குமுதம் பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார். அந்தப் பேட்டியில் தன் விவாகரத்து குறித்தும், அப்போது படங்களுக்கு தான் இசையமைக்கும் பொழுது இருந்த மனநிலை குறித்தும் விளக்கி உள்ளார்.

மன அழுத்தத்தில் ரஹ்மான்

அந்தப் பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான என்னை இழு இழு இழுவென இழுக்குதடி பாட்டு இப்போ கேக்கும் போதே எங்களுக்கு அவ்ளோ ப்ரஷ்ஷா இருக்கு. இந்த பாட்டுக்கு அவர் ஒரு 6 மாசத்துக்கு முன்ன மியூசிக் போட்ருப்பாரு. அதே சமயத்துல தான் அவர் பர்சனல் லைஃப்லயும் நிறைய பிரச்சனைகளை சந்திச்சிட்டு வந்திருப்பாரு.

எப்படி அவரால இவ்ளோ மன அழுத்தம் இருக்க சூழல்லயும் அவ்ளோ அழகான பாடல தர முடிஞ்சது. அவர், வாழ்க்கையில நடந்த அதே விஷயம் எல்லாம் உங்களுக்கும் நடந்தது. அந்த சூழல்ல நீங்க ஏதாவது படத்துக்கு இசை அமைச்சீங்களா? அது உங்களுக்கு ஏதாவது மன அழுத்தத்த குடுத்ததா? என அனிதா சம்பத் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் கேட்டுள்ளார்.

எல்லா சூழலிலும் வேலை

நான் எல்லா சூழல்லயும் வேல செஞ்சிட்டே தான் இருக்கேன். நம்மளோட தனிப்பட்ட வாழ்க்கையும் வேலையும் வேற வேற. இத ரெண்டையும் ஒன்னா நினைக்கவே கூடாது. அந்தத் தெளிவு இருந்தா மட்டும் தான் நாம சினிமாவுக்குள்ளேயே வரணும்.

அதையும் மீறி உங்களோட தனிப்பட்ட வாழ்க்கை வேலைய இடஞ்சல் பண்ணுதுன்னா நம்மால வேலைய தொடர்ந்து செய்யவே முடியாது. ஒரு படத்தோட தோல்வியோ, உங்களோட தனிப்பட்ட வாழ்க்கையோ ஒரு தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திட்டே வந்தா நாம அப்படியே கீழ கீழுந்துடுவோம். திரும்ப வேலையில அந்த இடத்த பிடிக்குறது ரொம்ப கஷ்டம்.

வேலையை தனியா பிரிச்சு பாக்கணும்

ஒருவேள நீங்க வாழ்க்கையில மீண்டு எழுந்து வரணும்ன்னு நெனச்சா வேலை அது தனி, தனிப்பட்ட வாழ்க்கை அதையும் தனியா பிரிச்சு பாக்கத் தெரியணும். வேலைன்னு வந்துட்டா எல்லாத்தையும் ஒதுக்கி வச்சு தான் ஆகணும். அந்த மனநிலைல நான் இருக்கருதால தான் தொடர்ந்து வேல செய்ய முடிஞ்சது. அதோட ரிசல்ட் தான் அமரனாகவும், லக்கி பாஸ்கராகவும் வந்தது.

எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும்

இது எல்லாமே ஒரு மனநிலை. இதுக்கு எல்லாம் நாம தயாரா இருக்கனும். வேலைன்னு வந்துட்டா கண்டிப்பா 100 சதவீதம் தரணும். மத்தது உங்கள தொந்தரவு பண்ணிட்டா நாம அந்த வேலைக்கே தகுதி இல்லாதவங்களா போயிடுறோம். நமக்கான கனவு இல்லன்னா சினிமாவுக்கு ஏன் என்றார்.

திருமணம்- விவாகரத்து

தமிழ் திரையுலக ரசிகர்களை தனது இசையாலும் குரலாலும் மயக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் பாடகி சைந்தவியை பள்ளி காலத்திலிருந்து காதலித்து பின் பெற்றோர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி தம்பதி தங்களது திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர் விரும்புவதாகவும், பரஸ்பர சம்மதத்துடன் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் அறிவித்தனர்.

பாராட்டு

இது இவர்களின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், இவர்களின் பிரிவுக்கு காரணம் இதுதான் என பல வதந்திகளும் வந்த வண்ணம் இருந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் கான்செர்ட்டில் சைந்தவி பாட்டுப் பாடி தன் நட்பை மீண்டும் நிரூபித்தாக கூறி பலரும் பெருமையாக பேசினர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.