Thalapathy Vijay: ‘அவரு படத்துக்கு மியூசிக் பன்னணும்.. ஆனா’ - வித்யாசாகர் மகன் பேட்டி!
“ஒருவேளை மீண்டும் அதே போல ஆல்பம் கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் இரண்டு பேரும் தான் இணைய வேண்டும்” - வித்யா சாகர் மகன்!
90 -களில் ரசிகர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளராக வலம் வந்தவர் வித்யா சாகர். குறிப்பாக இவரும் நடிகர் விஜயும் இணைந்த வா நிலவே, கில்லி, ஆதி, மதுர உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றும் மக்களால் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
காலங்கள் செல்ல, சினிமாவில் அடுத்தடுத்த அரங்கேறிய புது இசையமைப்பாளர்களின் வருகை இந்த காம்போவை உடைத்தது. வித்யாசாகருக்கும் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது அவர் இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
இந்த இசைக்கச்சேரிகளில் வித்யாசாகர் மகனான ஹர்ஷ் வர்தன் பாடும் பாடல்கள் அனைத்தும் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இந்த நிலையில் அவர் ஃபிலிம் பீட் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் தனக்கு விஜய் சாரின் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ஒரு இசையமைப்பாளராக நடிகர் விஜய் அவர்களின் படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.
என்னுடைய அப்பாவும் நடிகர் விஜயும் இணைந்த படங்களில் வெளியான பாடல்கள் எல்லாமே பயங்கர ஹிட். அதேபோல மீண்டும் ஒரு ஆல்பத்தை உருவாக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை.
ஒருவேளை மீண்டும் அதே போல ஆல்பம் கிடைக்க வேண்டுமென்றால், அவர்கள் இரண்டு பேரும் தான் இணைய வேண்டும்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்