Actress Mirnalini: ஒரே வைப்தான்.. புதிய வெப் சீரிஸ் மதுரை பெண்ணாக மாற விரும்புறேன்.. மிருணாளினி ஆசை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Mirnalini: ஒரே வைப்தான்.. புதிய வெப் சீரிஸ் மதுரை பெண்ணாக மாற விரும்புறேன்.. மிருணாளினி ஆசை

Actress Mirnalini: ஒரே வைப்தான்.. புதிய வெப் சீரிஸ் மதுரை பெண்ணாக மாற விரும்புறேன்.. மிருணாளினி ஆசை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 11, 2025 12:45 PM IST

Actress Mirnalini: பொங்கல் நேரத்தில் மதுரை ஒரே திருவிழா வைப்பாக உள்ளது. மதுரை பெண்ணாக மதுரை பாஷை பேசி நடிக்க விரும்புறேன் என்று தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நடிகை மிருணாளினி ரவி கூறியுள்ளார்.

ஒரே வைப்தான்.. புதிய வெப் சீரிஸ் மதுரை பெண்ணாக மாற விரும்புறேன்.. மிருணாளினி ஆசை
ஒரே வைப்தான்.. புதிய வெப் சீரிஸ் மதுரை பெண்ணாக மாற விரும்புறேன்.. மிருணாளினி ஆசை

மதுரை ரயில்நிலையம் அருகே அமைந்திருக்கும் ஜோய் ஆலுக்காஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோரூமில் நடந்த டைமண்ட் ஷோ நிகழ்வை நடிகை மிருணாளினி தொடங்கி வைத்தார். பொங்கலை முன்னிட்டு தொடங்கபட்டிருக்கும் இந்த சிறப்பு ஷோ ஜனவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மதுரை ஸ்லாங்கில் பேசி நடிக்க ஆசை

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை மிருணாளினி, "இங்கு வைர சேகரிப்புகள் அற்புதமாக உள்ளன. நல்ல அனுபவமாக உள்ளது.பொங்கல் நேரத்தில் மதுரை வந்தது கிடையாது. இப்போது பொங்கலை ஒட்டி வந்திருப்பது, மதுரை முழுவதும் திருவிழா வைப் ஆக உள்ளது. இங்கு இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

நான் நடித்திருக்கும் புதிய வெப்சீரிஸ் அடுத்து 2 முதல் 3 மாதங்களில் சோனி லைவ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

என்னை தேடி வரும் கதைகளுக்கு முழுமையான உழைப்பை வெளிப்படுத்தி நடிப்பேன். எனக்கு மதுரை ஸ்லாங்கில் பேசி நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது. வாய்ப்பு கிடைச்ச அதை நன்கு கற்றுக்கொண்டு இயற்கையாக மதுரை பொண்ணு மாதிரியே நடிக்க விரும்புகிறேன்" என்றார்.

புதிய வீடு வாங்கிய மிருணாளினி

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய வீடு வாங்கியிருப்பதாக தெரிவித்த நடிகை மிருணாளினி, அதன் கிரக பிரவேஷம் புகைப்படங்களை பகிர்ந்தார். அந்த பதிவில், "என் குழந்தைப் பருவத்தில், அப்பா ஒரு வீட்டைக் கட்டினார், அதற்கு அவரது அம்மாவின் பெயரை வைத்தார். அன்றிலிருந்து ஒரு வீட்டைக் கட்டி என் அம்மாவின் (மொழி) பெயரை வைக்க வேண்டும் என்பது என் கனவு.

கனவுகள் நனவாகும் என்று எனக்குத் தெரியாது, உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் ஆதரவும் இல்லாமல் இது சாத்தியமில்லை!

இதை அடைய என்னைத் தூண்டிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

மிருணாளினி படங்கள்

பெங்களுருவில் சாப்ட்வேர் எஞ்சினியாராக வேலை பார்த்து வந்த அவர், சோஷியல் மீடியாவில் கிடைத்த புகழ் மூலம் சினிமாவில் ஹீரோயின் ஆனார். தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர், தமிழ் சூப்பர் ஹிட் படமான ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கான கட்லகொண்ட கணேஷ் என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து தமிழில் சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா போன்ற படங்களில் நடித்தார். கடந்த ஆண்டில் ரோமியோ என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

எனிமி படத்தில் இடம்பிடித்த தும் தும் என்ற பாடலில் மிருணாளினியின் டான்ஸ் வைரலானது. இவரை போலவே பலரும் நடனமாடி பலரும் ரீல்ஸ்களை பகிர்ந்தனர். நடிகையாக இருந்தாலும் சமூக வலைதளத்தில் தனது பலோயர்களை கவரும் விதமாக அடிக்கடி புகைப்படங்களும், விடியோக்களும் பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.