வரிந்து கட்டி வரும் விமர்சனங்கள்.. ‘கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்ல’ - ரெட்ரோ ட்ரோலுக்கு கார்த்திக் பதிலடி!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது புதுமையான கதை சொல்லும் நுட்பங்கள், தயாரிப்பின் போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சூர்யாவுடனான கூட்டு உணர்வு பற்றி விவாதிக்கிறார்.

வரிந்து கட்டி வரும் விமர்சனங்கள்.. ‘கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்ல’ - ரெட்ரோ ட்ரோலுக்கு கார்த்திக் பதிலடி!
நடிகர் சூர்யா நடித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கி, அதிக எதிர்பார்ப்புகளுடன் மே 1 அன்று வெளியான திரைப்படம், ரெட்ரோ. முன்னதாக ரெட்ரோ படத்தில் சூர்யாவின் லுக், ஆடைகள், டிரெய்லர், கனிமா பாடல் வரை என பலதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில், மக்கள் ஆர்வத்துடன் படம் பார்க்க வந்தார்கள்.
ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தன. இன்னும் சிலர் படத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆன்லைனிலும் பலர் படத்தை கிண்டல் செய்து கமெண்டுகளையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து கார்த்திக் சுப்புராஜ் அண்மையில் சினி உலகம் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
