A.R.Rahman: 'ரஹ்மான் சொன்னத கேக்காதது என் தப்பு.. அதுனால படமே சீப் ஆகிடுச்சி'- இயக்குநர் விக்ரமன்
A.R.Rahman: புதிய மன்னர்கள் படத்தில் நான் செய்த சில தவறுகளை இசையமைப்பாளர் ரஹ்மான் சுட்டிக் காட்டியும் நான் கேட்கவில்லை என இயக்குநர் விக்ரமன் கூறியுள்ளார்,

A.R.Rahman: தமிழ் சினிமாவின் எவர்கிரீன் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் விக்ரமன். இவரது படைப்புகள் அனைத்தும் காலம் கடந்தும் பேசுகின்றன. பாடல்களும் படத்தின் வசனங்களும் ஹிட் அடித்ததுடன், சிலவை மீம் டெம்ப்ளேட்டுகளாக இன்றும் வலம் வருகின்றன.
இவரது படம் டிவியில் ஓடுகிறது என்றாலே குடும்பமே அமர்ந்து பார்த்து ரசிக்கும் விதமாக தான் இன்றும் இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில், இவர் தன் புதிய மன்னர்கள் படத்தில் நடந்த அனுபவங்கள் குறித்தும், படத்தின் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் சமீபத்தில் ரெட்நூல் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் புதிய மன்னர்கள் படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
'ரஹ்மான் ட்யூன் போட்ட ஓகே சொல்லனும்'
அந்தப் பேட்டியில், "எனக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் சாரோடவும், சிற்பி சாரோடவும் நல்ல வேவே லென்த் செட் ஆச்சு. எனக்கு என்ன பிடிக்கும்ன்னு அவங்களுக்குத் தெரியும். அவங்ககிட்ட இருந்து என்ன வேலை வாங்கலாம்ன்னு எனக்கு தெரியும். அதுனால இந்த காம்போ நடந்தது.
ஆனா நான் ரஹ்மான் சாரோட ஒர்க் பண்ணும் போது, மியூசிக், ட்யூன் எல்லாம் புடிச்சா ஓகே சொல்லிடுவேன். நீ கட்டும் சேல மடிப்புல பாட்டுக்கு எல்லாம் அவரு வேற வேற ட்யூன் குடுத்தாரு. நான் தான் வேணாம் வேணாம்ன்னு சொன்னேன். அப்போ புரொடியூசர் எல்லாம் ரஹ்மான் சார் ட்யூன் குடுத்தா உடனே பண்ணிடுங்க. இல்லன்னா அவர திரும்ப பிடிக்க முடியாது. அவரு ரொம்ப பிஸியா இருக்காருன்னு சொல்லுவாங்க.
'விடாப்பிடியா இருந்தேன்'
ஆனாலும், நான் விடாப்பிடியா இருந்ததுனால ரஹ்மான் சார் என்ன சொன்னாருன்னா முதல்ல பாட்டுக்கு வரி எல்லாம் எழுதிடுங்க. அதுக்கு தகுந்த மாதிரி நான் மியூசிக் பண்ணி தரேன்னு சொன்னாரு. அதுக்கு அப்புறம் தான் பழனிபாரதி சார வச்சு நீ கட்டும் சேல மடிப்புல பாட்டு எழுதி கொடுத்தோம். அதுக்கு அவரு மியூசிக் போட்டு கொடுத்தாரு.
புதிய மன்னர்கள் படம் நல்ல படம் தான். நான் அந்த படம் எல்லாம் ஓடும்ன்னு நெனச்சேன். ஆனா அது சரியா போகல. படம் எடுக்குற சமயத்துல ரஹ்மான் சார் எனக்கு ஒரு அட்வைஸ் சொன்னாரு. நான் அத கேக்கல. அது என் தப்பு தான். அத நான் இப்போ ஒத்துக்குறேன்.
'ரஹ்மான் சொன்னது 100% சரி'
இந்தப் படம் ரொம்பவே சீரியஸான படம். ஆனா, நான் படத்துக்கு நடுவுல அங்க அங்க நெறைய பழைய பாட்டு வச்சிருப்பேன். அத பாத்துட்டு ரஹ்மான் சார் சொன்னாரு. இந்தப் படம் ரொம்ப சீரியஸானது. இப்படி நடுவுல நடுவுல பாட்டு வந்தா படத்தோட வீரியத்தையே அது கொறைச்சிடும். அதுனால அதெல்லாம் எடுத்துடுங்கன்னு சொன்னாரு. நான் தான் கேக்கல. அவரு சொன்னது 100 சதவீதம் சரி.
'ரீ-ரெக்காராடிங்ல இன்ஃபுளுயன்ஸ்'
அதே மாதிரி புதிய மன்னர்கள் படத்துல நான் புதுவசந்தம் மியூசிக் எல்லாம் ரீ-ரெக்கார்டிங்ல சேத்துருப்பேன். ரஹ்மான் சார் அமெரிக்காவுக்கு ஒரு புரோகிராம்க்காக போயிருக்காரு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார் நான் வந்து மீதி வேலைய முடிச்சிடுறேன்னு சொன்னாரு. நான் தான் படம் ஏற்கனவே நிறுத்தி நிறுத்தி எடுத்து ஒரு வருஷமா இருக்கு. அதுனால ரிலீஸ் பண்ணியே ஆகணும்ன்னு விடாப்பிடியா இருந்தேன். அதுனால ராஜாமணின்னு ஒரு மியூசிக் டைர்க்டர் தான் புதிய மன்னர்கள் படத்துக்கு ரீ-ரெக்கார்டிங் பண்ணாரு.
'தப்ப நானே ஒத்துக்குறேன்'
அப்போ, நான் அந்த மியூசிக் டைர்க்டர்கிட்ட என்னோட இந்ஃபுளுயன்ஸ்ஸ யூஸ் பண்ணேண். நடுவுல புது வசந்தம் படத்தோட மியூசிக் எல்லாம் யூஸ் பண்ண சொன்னேன். இது புதிய மன்னர்கள் படத்த அப்படியே கெடுத்துடுச்சி. இத யாரும் கண்டுபிடிக்கல. நானா என் குற்றத்த ஒத்துக்குறேன்." என படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பின் கூறியிருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்