கல்யாணம் வேணாம்.. உறவுகளை விரும்புகிறேன்.. ரிலேஷன்ஷிப் மட்டும் போதும் - ஸ்ருதிஹாசன் ஷேரிங்ஸ்
நான் உறவுகளை விரும்புகிறேன். காதலை விரும்புகிறேன். ரிலேஷன்ஷிப்பில் இருப்பது எனக்கு பிடிக்கும். காதல் என்பது நீங்கள் செய்யும் வேலையிடம், உங்கள் குழந்தையிடம் அல்லது வளர்ப்பு பிராணிகளிடம் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று காதல், ரிலேஷன்ஷிப் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, பாலிவுட் என மூன்று சினிமாக்களிலும் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும், மாடலாகவும் வலம் வரும் இவர் மூன்று மொழிகளிலும் மாறி மாறி படங்களில் நடித்து வருகிறார்.
இதையடுத்து பிரபல ஊடகமாக பிங்க்வில்லா பிஹைண்ட் தி சக்ஸஸ் என்ற பெயரில் பல்வேறு பிரபலங்களை பேட்டி கண்டு வருகிறது. இதில், சினிமாவில் வெற்றிகரமான நடிகையாக இருந்து வரும் ஸ்ருதிஹாசனிடம் நடத்தப்பட்ட உரையாடலில் அவரது சினிமா பயணம், காதல், திருமணம், ரிலேஷன்ஷிப், சக நடிகர்களுடனான நட்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கேட்கப்பட்டது.
அப்போது ரிலேஷன்ஷிப், திருமணம் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியதாவது, "நான் உறவுகளை விரும்புகிறேன். காதலை விரும்புகிறேன். ரிலேஷன்ஷிப்பில் இருப்பது எனக்கு பிடிக்கும். ஏன் என்று எனக்கு தெரியாது. யாரிடமாவது என்னை மிகவும் இணைத்துக்கொள்கிறேன். இவர்தான் என் வாழ்க்கையில் ஸ்பெஷலான நபர் என்று எவரையும் என்னால் ஒருபோதும் சொல்ல முடியாது. அப்படிப்பட்டவரை இன்னும் நான் பார்க்கவில்லை.