Yogi Babu: 'எனக்கு ஆக்சிடெண்ட்டே ஆகலைங்க.. எல்லாமே பொய்'- விளக்கம் தந்த யோகி பாபு
Yogi Babu: எனக்கு எந்தவிதமான விபத்தும் ஏற்படவில்லை. நான் நலமுடன் இருக்கிறேன் என நடிகர் யோகி பாபு எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Yogi Babu: தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு, காமெடி வேடங்களில் மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருபவர் நிற்க கூட நேரமில்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார்.
யோகி பாபு கார் விபத்து
இந்த நிலையில், யோகி பாபு சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவர் பலத்த காயமடைந்ததாகவும், அவருடன் சென்ற உதவியாளருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலானது. மேலும், சில இணையதளம் மற்றும் சோசியல் மீடியாக்களில் இந்த தகவலை செய்தியாக வெளியிட்டு வருகின்றனர்.
எந்த விபத்தும் இல்லை
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் யோகி பாபு, “எனக்கு எந்தவித விபத்தும் ஏற்படவில்லை, நான் நலமாக இருக்கிறேன். தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். அந்த படப்பிடிப்புக்காக வந்திருந்த ஒரு கார் விபத்தில் சிக்கியது. அந்த காரில் நானும், என் உதவியாளரும் பயணிக்கவில்லை. ஆனால், நானும், என் உதவியாளரும் அந்த காரில் சென்று விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது முற்றிலும் தவறு, என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
விசாரித்த அனைவருக்கும் நன்றி
இந்த விசயம் அறிந்து என் நண்பர்கள், திரை பிரமுகர்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்கள். என் மீது அக்கறை கொண்ட அவர்கள் அனைவருக்கும் இந்த சமயத்தில் என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அதிகாலை விபத்து
முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் யோகி பாபு காரில் பெங்களூரு சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த யோகி பாபு பயணித்த கார், சாலையின் நடுவில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
காயம் இன்றி தப்பிய யோகி பாபு
இதில் நல்வாய்ப்பாக காயம் இல்லாமல் உயிர் தப்பினார், நடிகர் யோகி பாபு. பின் சிறிது நேரத்தில் வேறு ஒரு கார் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து பெங்களூரு புறப்பட்டுச் சென்றார், யோகி பாபு. இந்த விபத்து காரணமாக வாலாஜாபேட்டை - பெங்களூரு நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
யோகி பாபு படங்கள்
நடிகர் யோகி பாபு, மண்டேலா, பொம்மை நாயகி, லவ் டுடே, போட், லக்கி மேன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரையும் தனது நடிப்பால் ஈர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்