NagaChaitanya:'2 ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்; ஏமாற்றப்பட்டிருக்கிறேன்':காதல் தோல்வி குறித்து பேசிய நாகசைதன்யா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nagachaitanya:'2 ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்; ஏமாற்றப்பட்டிருக்கிறேன்':காதல் தோல்வி குறித்து பேசிய நாகசைதன்யா!

NagaChaitanya:'2 ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்; ஏமாற்றப்பட்டிருக்கிறேன்':காதல் தோல்வி குறித்து பேசிய நாகசைதன்யா!

Marimuthu M HT Tamil
Apr 30, 2024 05:58 PM IST

நாக சைதன்யா ஒருமுறை ஒரு நேர்காணலில் தான் ஒரு உறவில் ஏமாற்றிவிட்டதாக ஒப்புக்கொண்டார். இந்த அனுபவங்கள் தனது வாழ்க்கையில் வளர உதவியதாக அவர் கூறினார்.

NagaChaitanya:'2 ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்; ஏமாற்றப்பட்டிருக்கிறேன்':காதல் தோல்வி குறித்து பேசிய நாகசைதன்யா!
NagaChaitanya:'2 ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்; ஏமாற்றப்பட்டிருக்கிறேன்':காதல் தோல்வி குறித்து பேசிய நாகசைதன்யா!

நடிகர் நாகசைதன்யா தனது தற்போதைய ரிலேஷன்ஷிப் நிலை குறித்து எந்த ஒரு சரியான தகவலை அளிக்கவில்லை என்றாலும், சில சர்ச்சைக்குரிய தலைப்புகளைப் பற்றி பேசுவதற்கு அவர் கூச்சப்படுவதில்லை. தைரியமாகப் பேசுகிறார். 

 ரெட்டிட்டில் என்னும் சமூக வலைதளத்தில், நடிகர் நாகசைதன்யா பேசிய ஒரு பழைய வீடியோ ஒன்று மீண்டும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில், ஒரு ரிலேஷன்ஷிப்பில் துரோகம் குறித்த நாகசைதன்யாவின் கருத்துக்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. 

நாக சைதன்யா, தனது 2018ஆம் ஆண்டு வெளியான ’’ஷைலஜா ரெட்டி அல்லுடு’’ திரைப்படத்தின் புரோமோஷனின்போது படமாக்கப்பட்ட பேட்டியில், நாகசைதன்யாவிடம் எப்போதாவது இரண்டு முறை ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறீர்களா என்று கேட்கப்படுகிறது. இதே கேள்வி சக நடிகை அனு இம்மானுவேலிடம் கேட்கப்பட்டபோது இல்லை என்று கூறுகிறார்.

ஆனால், நாகசைதன்யாவோ, 'ஆம்' என்ற பதிலைச் சொல்லி விளக்குகிறார். அதில்,"நான் இரண்டு ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன். ஒரு உறவில் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். அந்த அனுபவங்கள் தான் வாழ்க்கையில் வளர உதவியது. எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும். சரி எனக்கு எல்லா அனுபவங்களும் இருந்தன. இப்போது அதில் சரியாய் மீண்டிருக்கிறேன்’’ எனப் பேசியுள்ளார். அது வைரல் ஆகி வருகிறது. 

ஒரு Reddit பயனர் இந்த இடுகையைப் பகிர்ந்து, "இது அவரது படங்களில் ஒன்றிற்கான புரோமோஷன் நேர்காணல். அப்போது சமந்தா ரூத் பிரபுவுக்கும், நாகசைதன்யாவுக்கும் திருமணம் ஆகி இருந்தது. மேலும் அவர்களின் விவாகரத்துக்குப் பிறகு, சமந்தா நடித்த யசோதா என்ற திரைப்படம் முதல் நாளில், அவரது அடுத்த இரண்டு படங்களை விட அதிகமாக ஓபனிங்கில் கல்லா கட்டியது.

நாகசைதன்யாவின் கருத்துக்களுக்கு பதிலளித்த ஒரு சமூக வலைதளப் பயனர், "ரிலேஷன்ஷிப் நடத்தை பற்றிய நிகழ்வுகளை விளம்பரப்படுத்தாத திரைப்பட பிரபலங்களின் எண்ணிக்கையை நீங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம்" என்று எழுதினார். மற்றொருவர், "லட்சியவாதிகளை மக்கள் ஏன் தவறாக நினைக்கிறார்கள் என்று புரியவில்லை. அவர்கள் செல்வந்தர்களாகப் பிறக்காதது அவர்களின் குற்றமல்ல" என்றார்.

சமீபத்தில், அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான், கரீனா கபூர், மோனா சிங் நடிப்பில் வெளியான 'லால் சிங் சதா' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர், நாகசைதன்யா. 

அரவிந்த் சாமி, கிருத்தி ஷெட்டி, பிரியாமணி, ஆர்.சரத்குமார் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்த வெங்கட் பிரபுவின் பீரியட் ஆக்ஷன்-த்ரில்லர் படமான ’’கஸ்டடி’’யில் கடைசியாக நாகசைதன்யா நடித்தார். நாகசைதன்யா அடுத்ததாக சந்து மொண்டேடி இயக்கும் ‘’தண்டெல்'' படத்தில் நடிக்கவுள்ளார்.

நாக சைதன்யாவின் பெர்ஷனல் வாழ்க்கை:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு, நடிகை சமந்தா ரூத் பிரபுவை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 2021-ல் பிரிவதாக அறிவித்தனர். 2022ஆம் ஆண்டு முதல், நாகசைதன்யா சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்துவருவதாக வதந்தி பரவியுள்ளது. இருவரும் தங்கள் உறவை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.