தமிழ் செய்திகள்  /  Entertainment  /  'I Have A Terrible Addiction..' Vijay Sethupathi's Friend Who Got Rid Of Addiction!

Vijay Sethupathi: 'எனக்கு பயங்கர போதையா இருக்கு..' விஜய்சேதுபதி போதையை போட்டுடைத்த நண்பர்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 24, 2024 08:46 AM IST

ஒரு முறை நான் அவரிடன் சொன்னேன். கலைஞர் ஐயா வந்து பீச்சுல வைரமுத்து சார். வாலி, புலமை பித்தன் அவங்கள எல்லாம் கூட்டிட்டு வந்து இலக்கியம் பேசுவார்னு சொன்னபோது அவர் சொன்னார் ஐயா எனக்கே இவ்வளவு போதையா இருக்கே அவருக்கு எவ்வளவு போதையா இருந்துருக்கும் என்று சொன்னார் என்றார்.

'எனக்கு பயங்கர போதையா இருக்கு..' விஜய்சேதுபதி போதையை போட்டுடைத்த நண்பர்!
'எனக்கு பயங்கர போதையா இருக்கு..' விஜய்சேதுபதி போதையை போட்டுடைத்த நண்பர்! (@VSSubbula (Twitter))

ட்ரெண்டிங் செய்திகள்

கேள்வி: சார் விஜய் சேதுபதி சில நேரம் பேசுறப்ப எல்லாம் இந்த மனுஷன் எங்க இருந்துடா யோசிக்குறார். நீங்க நிறைய படிக்குறீங்களா? நீங்க எங்க இருந்துங்க இத எல்லாம் எடுக்குறீங்கன்னு சொல்லி நிறைய மேடைகள்ல பார்த்து இருக்கிறோம்ல அதுக்கு பின்னாடி டான் சார்தா இருக்குறாரு என்பது உண்மையா?

பதில்: அய்யோ அது எல்லாம் இல்ல. அன்னைக்கு பேசிக்குட்டு இருக்கப்ப ஒன்று சொன்னார் நா இத்தனை படம் நடிச்சுட்டே சார். இத்தனை படங்களோட கேரக்டர நான் உள் வாங்குறேன்ல அதுக்கான கேரக்டர பாக்குறப்போ நா இத யோசிக்குறே. இந்த கேரக்டர் எப்படி யோசிக்கும். அப்படின்னு யோசிக்கும் போது எனக்கு அதுக்கான படிப்பினையா இருக்கும் அப்படின்று சொல்லி சொன்னார். 

நா பேஸ்புக்ல கூட எழுதி இருப்பேன். ஒரு தடவ ஒரு பொண்ணுக்கு உதவி பண்ணிருக்கார்னு. அது மாதிரி அவர் எல்லாத்தையும் வாசிப்பார். அவர் போய் ஒரு சூட்டிங்ல ஒரு சிங்கம் நடந்துக்கிட்டு இருக்கத வாட்ச் பண்ணார்னா அடுத்தநாள் அது வெளிப்படும் அவர்ட. அடுத்த நாள் வில்லன கொல்றப்ப அது அவர் அறியாம அவர்குள்ள இருந்து அது வெளிப்படும். 

அவருக்கு நா என்ன சொல்றது திருவள்ளுவர் போய் எந்த காலேஜ்ல படிச்சார் தொல்காப்பியர் எங்க படிக்குறார். அவர் நிறைய மனிதர்களை பார்க்குறாங்க. நம்மள விட ஒரு நாளைக்கு 300 ,400 பேர் கூட பழகுறதுக்கு உண்டான வாய்ப்பு கிடைக்குதுல இப்படி எல்லா மனிதர்களையும் படிக்குறபோது அவங்களுக்கு அறிவு கூடிருது. அந்த அறிவ அவங்க அனலைஸ் பண்றாங்க. 

அவர் கேரவன்ல போய் உட்காந்து கிட்டு தான் பெரிய ஆள் அப்படின்னு காட்டிக்காம மக்களோட அவர் சகஜமா பழகுறார். இன்னைக்கு இருக்க கூடிய ஹீரோக்கள்ல கூப்பிட்டு.. ஒருத்தர கூப்டு முத்தம் குடுக்குறது. அவங்க கூட பேசுறாங்க. அவங்களுக்கு நிறைய உதவிகள் செய்றாங்க. நமக்கு தெரிஞ்சு விஜய் சேதுபதி சார் செய்ற உதவி யாருக்குமே தெரியாது. எனக்கு அவர் நண்பர்ன்றதால சொல்லல அவர் எவ்வளவு உதவிகள் செய்றார்ன்னுடு.. அப்படி செய்யும் போது ஒவ்வொருத்தரையும் படிச்சுக்கிறார் என்றார். மேலும் நீங்க வாசிக்க கேட்பார் சார் என்றார்.

கமல் சார்லாம் அப்படி சொல்லுவாங்க ஆழ்வார்களை பற்றி பேசினாலாம் கேட்பாங்கலாம்ன்னு. ஒரு முறை நான் அவரிடன் சொன்னேன். கலைஞர் ஐயா வந்து பீச்சுல வைரமுத்து சார். வாலி, புலமை பித்தன் அவங்கள எல்லாம் கூட்டிட்டு வந்து இலக்கியம் பேசுவார்னு சொன்னபோது அவர் சொன்னார் ஐயா எனக்கே இவ்வளவு போதையா இருக்கே அவருக்கு எவ்வளவு போதையா இருந்துருக்கும் என்று சொன்னார் என்றார். இலக்கியம் படிப்பது மிகப்பெரிய போதையை உருவாக்கும்.

விஜய் சேதுபதியின் அன்பான முத்தம் உங்களுக்கு கிடைச்சுருக்கா என்ற கேள்விக்கு நான் இதுவரை வாங்க வில்லை என்றார்.

நான் குட்டி குட்டியா சில ஸ்டேட்டஸ் பார்த்தா எதுவா இருந்தாலும் அனுப்புவேன்.

எனக்கு தெரிந்து இயற்கை சார்ந்த விஷயங்கள், மனிதனின் மெல்லிய உணர்வுகள் குறித்த விஷயங்களில் அவருக்கு மிகுந்த ஈர்ப்பு உள்ளது.

அவர் சில படங்களின் போது அவர் ரூம்க்கு பக்கத்துல ரூம் போட்டு குடுத்துடுவாங்க நாங்க இலக்கியம் பேசுவோம். நாங்க வேற யாரை பத்தியும் பேச மாட்டோம். அதுனால் எங்களுக்கு முரண் வருவதில்லை. இது போன்று என ஏராளமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

நன்றி Take 1

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.