Ram Charan wife : அந்தரங்க காட்சியில் நடிக்கும் போது சங்கடமாக உணர்ந்தேன் - ராம் சரண் மனைவி ஓபன் டாக்!
என் கணவர் ராம் சரண் மற்ற நடிகைகளுடன் அந்தரங்க காட்சியில் நடிக்கும் போது நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன் என உபாசனா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் சீனியர் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம்சரண் உலக அளவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார். ராம்சரண் மகதீரா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருக்கிறார்.
இவருக்கும் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர், பிரதாப் சி.ரெட்டியின் பேத்தியான உபாசனா காமினேனிக்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. ராம் சரணுடன் திருமணம் ஆன புதிதில் பலவித விமர்சனங்களை எதிர்கொண்டார் உபாசனா.
கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி ராம் சரணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அவரின் வளைகாப்பு துபாயில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ராம்சரண் குழந்தைக்கு க்லின் காரா கொனிடலா என பெயர் சூட்டியுள்ளனர்
நடிகர் ராம்சரண் தற்போது, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு படமான கேம் சேஞ்சரில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். கியாரா அத்வானி படத்தில் நாயகி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இப்படத்தில், ராம் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராம் சரண் மனைவி உபாசனா, தனது கணவர் ராம் சரண் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் "என் கணவர் ராம் சரண் மற்ற நடிகைகளுடன் அந்தரங்க காட்சியில் நடிக்கும் போது நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன்.
ஏன் என்றால் நான் சினிமா பின் புலம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட குடும்பத்திலிருந்து வந்தவள் என்பதால், அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் அவரிடம் கதாநாயகிகளுடன் இப்படி நடித்துத்தான் ஆக வேண்டுமா என்று பல முறை அவரிடம் கேட்டு இருக்கிறேன்.
ஆனால் அவர் தயவுசெய்து புரிந்து கொள் இது எனது தொழில் மற்றும் இதுதான் நடக்கும் என்று எனக்கு புரியவைத்தார். தொழில்நுட்பங்கள் பற்றியும் விளக்கமாக கூறினார். இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. ஆரம்பத்தில், எனக்குப் புரியவில்லை, நாங்கள் இருவரும் வெவ்வேறு உலகில் வாழ்ந்து வந்தோம். ஆனால் அவர் என்னை புரிந்து கொண்டு எனக்காக அனைத்தையும் புரியவைத்தார். அவர் என்னைவிட சிறந்தவராக இருக்கிறார்.
குழந்தை வளர்ப்பில் நாங்கள் இருவரும் முக்கிய பங்கு வகிக்கிறோம் என்று நினைக்கிறேன். ஒரு அம்மா என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ, அதை விட அப்பா அதிகமாக செய்கிறார் என்று நினைக்கிறேன்.
நாங்கள் காராவை சமமாக வளர்க்கிறோம், என் மகள் காரா அப்பா செல்லம் என்பதை சொல்வதில், பெண், நான் மிகவும் பொறாமைப்படுகிறேன். அவள் அப்பாவை பார்த்துவிட்டாள் அவள் முகம் மலரும், அவள் கண்களில் ஒரு மின்னல் தெரியும்” என்று உபானா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்