Shane Nigam: ‘கொடைக்கானலில் கேர்ள் ஃப்ரெண்ட் கூட சுத்தியிருக்கேன்.. ஆனால் இப்ப ..’: மெட்ராஸ்காரன் ஷேன் நிகம் பேட்டி
Shane Nigam: ‘கொடைக்கானலில் கேர்ள் ஃப்ரெண்ட் கூட சுத்தியிருக்கேன்.. ஆனால் இப்ப ..’: மெட்ராஸ்காரன் ஷேன் நிகம் பேட்டி

Shane Nigam: மலையாளத்தில் கும்பளாங்கி நைட்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் ஷேன் நிகம் தென்னிந்தியாவில் மிகப் பிரபலமானார். சமீபத்தில் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். அவர் கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம். அதில்,
‘’இவங்களதான் என் பைக்கில் கூட்டிட்டுப் போய் ரவுண்ட் அடிக்கணும் என்கிற லிஸ்ட்டில் யார் ஃபர்ஸ்ட்?
என்னுடைய சகோதரிகளை தான் நான் கூட்டிட்டுப்போகணும்னு நினைக்கிறேன். என்னோட அம்மா கொஞ்சம் பைக்கில் போக பயப்படுவாங்க. என்னுடைய மூத்த சகோதரிக்கும் பயம். ஏனென்றால், பைக் கொஞ்சம் ஹேவியாக இருக்கு இல்லையா. அதனால் தான்.
கேர்ள் ப்ரெண்ட் ஓட பைக் ரைடு இருக்கா?
நிறைய இருக்கு.
ஏதாவது ஒன்னு சொல்லலாமா?
சொல்லலாம் தான். ஆனால், கொஞ்சம் கஷ்டம். இப்போது சமீபத்தில் கொடைக்கானல் போயிருந்தேன். அப்போது நான் தங்கிய ரிசார்ட்டில் பைக் எல்லாம் இருந்தது. அதனை எடுத்துக்கொண்டு, என் கேர்ள் ஃப்ரெண்ட் ஓட ரவுண்ட் அடிச்சேன். பெங்களூரு, மதுரை எல்லாம் பைக்கிலேயே போயிருக்கேன்.
அப்போது உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன?
அது சொல்லமுடியாது. நான் சிங்கிளாகத் தான் இருக்கேன். சிங்கிள் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள்.
வண்டியில் போயி போலீஸில் மாட்டியிருக்கீங்களா?
கடவுள் அருளால் இதுவரை அப்படி மாட்டவே இல்லை. ஓரளவுக்கு கரெக்ட்டாக ரூல்ஸ் எல்லாம் ஃபாலோ பண்றேன். பைக் ஓட்டி ஃபைனே வாங்கியது இல்லை. காருக்கு வாங்கின மாதிரியும் ஞாபகம் வரலை.
போலீஸ் பிடிக்கும்போது நீங்களா அப்படின்னு ஆச்சரியப்பட்டு இருக்காங்களா?
அது எல்லா நாளும் நடக்கும். பரிசோதனைக்காக செக் செய்யும்போது, அது நடக்கும்.
டிரங்க் அண்ட் டிரைவ் கேஸில் மாட்டியிருக்கீங்களா?
இல்லை. இல்லை. நான் தண்ணி அடிக்கிறது இல்லை. அதனால் பிரச்னையில்லை.
உங்களுடைய டிரீம் பைக், ஹார்லி டேவிட்சன்னு சொல்லியிருக்கீங்க? எப்போது வாங்கலாம்னு நினைக்குறீங்க?
யமஹா ஆர்டி 350 விண்டேஜ் பைக் ஓட்டும்போதுதான், பைக்கு மேலேயே எனக்கு கிரேஸ் வந்துச்சு. அதுக்கு முன்னாடி பைக் ரைஸ் அப்படின்னு ஆர்வம் எல்லாம் இல்லை. அந்த சமயத்தில் என் கையில் ஸ்கூட்டர் தான். அதுவும் எல்லா வெஸ்பா தான். அதனால் எனக்கு ஆரம்பத்தில் பைக்கில் விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. முதலில் யமஹா ஆர்டி 350 பைக் ஓட்டும்போது, இது நல்லாயிருக்குன்னு நினைச்சு, அடுத்து நான் ஓட்ட ஆரம்பிச்சேன்.
பசங்க ஸ்கூட்டர் ஓட்டுன கேங்கில் கலாய்ப்பாங்களே.. அப்படி நடந்து இருக்கா?
நான் வைச்சிருந்த எல்லோ வெஸ்பா பார்க்கிறது ரொம்ப நல்ல ஸ்கூட்டர். அதனால் கலாய்க்கிற மாதிரி இல்லை.
மோட்டார் மேல் விருப்பம் வர ஆரம்பிச்சதும், பைக் வாங்கணும், கார் வாங்கணும்னு நினைச்சு இருக்க்கீங்களா?
ஆம். நிச்சயமாக நினைச்சிருக்கேன். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் இருக்கு. நல்ல பைக் வாங்கணும்னு ஆர்வம் எல்லாம் இருக்கு. நான் இப்போது தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் படம் பண்ணிட்டு இருக்கேன். அதனால், அந்த நியூ லுக் தெரியக்கூடாது. அதனால் தான், கடற்கரையில் வண்டியை நிறுத்தினாலும், இந்த ஹெல்மேட்டோடு தான் இருக்கேன். செல்வராகவன் சார், சாந்தனு பாக்யராஜ், அல்போன்ஸ் புத்திரன் நடிக்கிறார். சாந்தனுவும் நானும் ஃப்ரெண்ட் மாதிரி நடிக்க ஆரம்பிச்சிட்டோம்.
நன்றி: கலாட்டா தமிழ்

டாபிக்ஸ்