Devi Sri Prasad: 'தேவி ஸ்ரீ பிரசாத்தை படத்தில் சேர்க்க வேண்டாம் என நினைத்தேன்'- ஷாக் தந்த புரொடியூசர்
Devi Sri Prasad: தண்டேல் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தை இசையமைப்பாளராக நான் தேர்வு செய்ய விரும்பவில்லை என படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கூறியுள்ளார்.

Devi Sri Prasad:நாக சைதன்யா, சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ள தண்டேல் திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்தப் படம் பிப்ரவரி 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
முன்னதாக தண்டேல் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அருமையான இசையை வழங்கியுள்ளதாக பலரும் கூறிவரும் நிலையில் தண்டேல் படத்திற்கு முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க வேண்டாம் என்று தான் நினைத்ததாக அல்லு அரிவிந்த் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத்க்கு நோ
தண்டேல் படத்தின் நாக சைதன்யா, சாய் பல்லவி, இயக்குனர் சந்தூ மொண்டேட்டி, தயாரிப்பாளர் அல்லு அரிவிந்த் ஆகியோர் சமீபத்தில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசினர். அந்தப் பேட்டியில் அல்லு அரிவிந்த் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை வெளிப்படுத்தினார். இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தண்டேல் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று சந்தூ கூறியபோது, அதை தான் மறுத்ததாக கூறியுள்ளார்.
புஷ்பாவில் பிஸி
தேவி ஸ்ரீ பிரசாத் புஷ்பா 2 படத்தில் பிஸியாக இருக்கிறார். அவர் புஷ்பா படத்திற்கு அதிக கவனம் செலுத்துவார். அதனால் தண்டேல் படத்திற்கு அதிக நேரம் ஒதுக்க மாட்டார் என்று நினைத்தேன். தேவி ஸ்ரீ பிரசாத் தனக்கு மிகவும் நெருக்கமானவர் தான். நாங்கள் வெளியே எங்கே சந்தித்தாலும் இருவரும் காதலர்கள் போல கட்டிப்பிடிப்போம். தேவி மீது தனக்கு மிகுந்த அன்பு இருந்தாலும், இந்தப் படத்திற்கு தேவி சரியாக வருவாரா என்று யோசித்தேன் என்றார்.
பிடிவாதம் செய்த அல்லு
மேலும், தண்டேல் படத்திற்கு யாரை இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கலாம் என்று அல்லு அர்ஜுனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, காதல் கதை என்பதால் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைக்க வேண்டும். வேறு யாரையும் நினைக்க வேண்டாம் என்று அல்லு அர்ஜுன் என்னிடம் கூறினார். அதனால் தான் தேவி ஸ்ரீ பிரசாத்தை தண்டேல் படத்திற்கு தேர்வு செய்ததாகவும் அவர் கூறினார்.
ஹிட் அடித்த பாடல்கள்
தண்டேல் படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. அதில், புஜ்ஜி தள்ளி, சிவசக்தி, ஹைலேசா பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. புஜ்ஜி தள்ளி பாடல் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான டிரைலரும் மக்களை கவர்ந்துள்ளது.
ஸ்ரீகாக்குளம் மீனவரின் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடித்துள்ளார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு சந்தூ மொண்டேட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
தண்டேல் புரொமோஷன் தள்ளி வைப்பு
முன்னதாக தண்டேல் படத்தின் புரொமோஷன் விழா இன்று (பிப்ரவரி 1) நடைபெற இருந்தது. இந்த விழாவில் அல்லு அர்ஜூன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஏற்கனவே அல்லு அர்ஜூன் புஷ்பா 2 படத்தின் பிரீமியர் விழாவில் பங்கேற்ற போது சந்தியா தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரசிகை ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அவர் எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார்.
தண்டேல் பட நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன் கலந்து கொள்ளும் போது முதலில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் பின் அதனை மாற்றி பிரம்மாண்டமாக விழாவை நடத்த ஏற்பாடு செய்திருப்பதாகவும் படக்குழு கூறியுள்ளது. இதனால், தண்டேல் பட விழா நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்