வெற்றிமாறன் பல்கலைகழகத்தில் நான்கு ஆண்டுகள்..விடுதலைக்கு முன், விடுதலைக்கு பின்! விஜய் சேதுபதி, சூரி நெகிழ்ச்சி பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வெற்றிமாறன் பல்கலைகழகத்தில் நான்கு ஆண்டுகள்..விடுதலைக்கு முன், விடுதலைக்கு பின்! விஜய் சேதுபதி, சூரி நெகிழ்ச்சி பேச்சு

வெற்றிமாறன் பல்கலைகழகத்தில் நான்கு ஆண்டுகள்..விடுதலைக்கு முன், விடுதலைக்கு பின்! விஜய் சேதுபதி, சூரி நெகிழ்ச்சி பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 27, 2024 03:55 PM IST

விடுதலை படத்தை பொறுத்தவரை வெற்றிமாறன் தான் வாத்தியார். வெற்றிமாறன் என்ற பல்கலைக்கழகத்தில் விடுதலை என்ற பட்டப் படிப்பை நான்கு ஆண்டுகள் படித்து பெற்றுள்ளேன் என்று விடுதலை 2 இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

வெற்றிமாறன் பல்கலைகழகத்தில் நான்கு ஆண்டுகள்..விடுதலைக்கு முன், விடுதலைக்கு பின்! விஜய் சேதுபதி, சூரி நெகிழ்ச்சி பேச்சு
வெற்றிமாறன் பல்கலைகழகத்தில் நான்கு ஆண்டுகள்..விடுதலைக்கு முன், விடுதலைக்கு பின்! விஜய் சேதுபதி, சூரி நெகிழ்ச்சி பேச்சு

இதையடுத்து படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளயீடு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், இசைஞானி இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் உள்பட படக்குழுவினர்கள் பங்கேற்று பேசினார்கள்.

விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, "ராஜா இருக்கும் காலத்தில் அவர் இசையை ரசிப்பதே பெரும் வரமாக நினைக்கின்றேன். அவரோடு கேள்வி கேட்பது, அவரோடு பழகுவது, பேசுவது, அவர் படத்தில் வேலை பார்த்தது, இப்படி பல வரங்களை வாங்கி வந்த பெரும் பாக்கியவானாக கருதுகிறேன்.

முதன் முதலில் தன் காதலியின் முகத்தை எதிரில் அமர்ந்து பார்ப்பது போல் இளையராஜா பேசும்போது அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் இசை மட்டுமல்லாமல் அவர் பேச்சிலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன்.

வெற்றிமாறன் பல்கலைகழகத்தில் நான்கு ஆண்டுகள்

விடுதலை 2 பற்றி பேச வேண்டும் என்றால் வெற்றிமாறன் மட்டுமே உரிமை கொண்டாடக் கூடிய படம். வெற்றிமாறன் விடுதலை படத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருந்தோம் என்பது தான் எதார்த்தம். வெற்றிமாறன் என்ற பல்கலைக்கழகத்தில் விடுதலை என்ற பட்டப் படிப்பை நான்கு ஆண்டுகள் படித்து பெற்றுள்ளேன்.

ஒவ்வொரு படத்திலும் ஒரு இயக்குநர் என்ன எழுதுகிறாரோ அதை முடிந்த அளவு புரிந்து நடிக்க முயற்சி செய்வேன். ஆனால், வெற்றிமாறன் எழுதிய வசனங்களை வீட்டுக்கு சென்று அதை நான்கு பேருடன் விவாதம் செய்துகொள்ளும் அளவுக்கு நல்ல அனுபவம் கிடைத்தது.

விடுதலை படத்தை பொறுத்தவரை வெற்றிமாறன் தான் வாத்தியார். அவருடன் இருந்து கற்றுக் கொண்ட மாணவனாக என்னை நான் நினைக்கிறேன்" என்றார்.

விடுதலைக்கு முன், விடுதலைக்கு பின்

விழாவில் நடிகர் சூரி பேசியதாவது, "எந்த விழாவாக இருந்தாலும் கடந்த 49 ஆண்டுகளாக இளையராஜா தான் ஒரே நாயகன். இளையராஜா ஒரு இசை மருத்துவர். வெற்றிமாறன் என்னும் யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரி படித்ததற்கு பிறகு தான் என் வாழ்க்கை மாறியது. என் வாழ்க்கையே கிமு, கிபி என்பது போல் விடுதலைக்கு முன் விடுதலைக்கு பின் என்று பிரிக்கலாம்.

கொட்டுக்காளி படம் பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் எனக்கு நான்கு பக்க கடிதத்தை எழுதினார். இதற்கெல்லாம் காரணம் வெற்றி மாறன் தான்" என்றார்.

நல்ல மனிதர் விஜய்சேதுபதி

விடுதலை 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் கென் கருணாஸ் பேசியாதவது, "மிகவும் நல்ல மனிதர் விஜய் சேதுபதி, என் வாழ்கையில் ஊக்கமளிக்கும் விதமாக நிறைய சொல்லிக் கொடுத்தார். என் அம்மாவுக்கு பிறகு என்னை அழகாக இருக்க என்று அதிகம் சொல்லியது விஜய்சேதுபதி தான்" என்றார்.

விடுதலை 2 படம்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான விடுதலை படத்தின் இரண்டாம் பாகமாக விடுதலை 2 உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் சூரி பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி, பெருமாள் வாத்தியார் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முதல் பாகம் அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வரும் பெருமாள் வாத்தியாரை கதாபாத்திரத்தை போலீசார் பிடிப்பதுபோல் முடிந்திருந்திருக்கும். இதன் தொடர்ச்சியாக விடுதலை 2 படத்தில் பெருமாள் வாத்தியார் முன் கதையும், அவர் போலீசிடமிருந்து தப்பித்தாரா இல்லையா என்பதையும் விவரிக்கிறது. படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கும் இருக்கும் நிலையில் அனல் பறக்கும் வசனங்களுடன் படம் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.